பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

諡68 நினைவுக் குமிழிகள்-3 விட்டுத் தம் 45-வது வயதில் பயிற்சிக் கல்லூரியில் வந்து சேர்ந்தார். இவர் பெரிய குடும்பி என்பதை இவர் இல்லத் தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளால் அறிய முடிந்தது. இவர் பயிற்சி பெற்ற ஒன்பது மாதங்களுக்குள் இவருடைய பெண் மக்களுள் ஒருத்தி முதல் பிரவசத்திற்குக்காரைக்குடி வந்திருந்தாள்; மற்றொரு பெண்ணுக்கு இவர் இல்லத்தில் சீமந்தம் நடைபெற்றது; மூன்றாவது பெண்ணுக்கு திருமண நிச்சிதார்த்தம் நடைபெற்றது. ஆனால் பிற துறைகளைக் கைவிட்டு வந்தவர்களில் நடராசன், இராசு, இராசகோபாலய்யர் சிறந்த ஆசிரியர்களாகத் திகழ்ந் தனர். இராசகோபாலய்யர் பயிற்சிக்குப் பிறகு திருச்சி உருமு தனலட்சுமி உயர்நிலைப் பள்ளியில் சிறந்த ஆசிரிய ராகப் (கணிதம்) பணியாற்றி நற்பெயர் ஈட்டினார் என் பதை அறிந்து மகிழ்ந்தேன். மனமொத்து வாழமுடியாமல் முதல்மனைவியைக் கைவிட்டு இரண்டாவதாக ஒருத்தியை மணந்து கொண்டு சிறப்பாக வாழவில்லையா? அது போல, [ [ ロ இன்னொரு மாணவர் (வயது-48; பெயர் நினைவு இல்லை) பி. டி. பட்டத்தேர்வில் தேறவில்லை; நான் காரைக் குடியிலிருந்தபோதே மார்ச்சு செப்டம்பர் மாதத் தில் நடைபெறும் தேர்வுகளில் பத்து முறைகளுக்குக் குறை. யாமல் தேர்வுகள் எழுதியும் தேறவில்லை. நான் கேட் டேன்; நன்றாகத் தயாரித்துக் கொண்டு எழுதுவது தானே?' என்று. அவர் சொன்னார்: " எனக்கு நினைவு. ஆற்றல் குறைந்து போயிற்று. ஒவ்வொரு தாளிலும் (ஐந்து தாள்கள்) ஐந்து வினாக்கட்கு விடைதெரியும். அவற். றையே ஒவ்வொரு தடவையும் விடைத்தாளில் வினா எண் போடாது எழுதி வருகின்றேன், பத்து முறையும் இப்படித்தான் செய்து வருகின்றேன், ஆனால் தேர்ச்சி பெற முடியவில்லையே! என்று சொல்லி வருந்தினார், "உங்களை ஆண்டவன் தான் காக்க வேண்டும்’ என்று.