பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 369 வாழ்த்தினேன். இன்னொருவர் சைதையில் என் வகுப்புத் தோழர்- பெயர் நாராயணசாமி நாயுடு-1956வரை பல முறை பி.டி. தேர்வு எழுதி காயம்பட்ட போர்வீரர்’ (Wounder Soldier) நிலையில் இருந்தார். இவரும் பல முறை எழுதித் தோல்வியுற்று தேர்வு எழுதுவதையே கை விட்டவராக இருந்தார். இவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நான் கோனாப்பட்டுக்குப் போனபோதெல் லாம் இவரைத்துாண்டி எழுத வைத்தேன். இம்முறை இவர் வெற்றியடைந்தார்-பதினேழு முறை படையெடுத்த யாரோ ஒர் முகம்மதிய மன்னர் பதினேழாவது முறை வெற்றியடைந்தது போல! இவர்கள் யாவரும் காரைக்குடி யைத் தேர்வு மையமாகத் (Examination Centre) G střß தெடுத்துக் கொண்டு தேர்வு எழுதினமையால் இவற்றை அறிய முடிந்தது. 口 II 瓯 இன்னொரு மாணவி மீனவர் வகுப்பைப் சேர்ந்த கிறித்தவப் பெண்; தூத்துக்குடியைச் சேர்ந்தவள்; இவளது சமயப்படிச் சனிக்கிழமைதோறும் சிறப்புத் தொழுகையை மேற்கொள்ள வேண்டுமாம். அந்த நாளில் வேறு எதையும் மேற்கொள்ளக் கூடாதாம். பி.டி. தேர்வுகளில் 5 வினாத் தாள்கட்கு விடைகள் எழுத வேண்டும். அந்தக் காலத்தில் மார்ச்சு ஆயினும் செப்டம்பர் ஆயினும், தேர்வு செவ்வா யன்றுதான் தொடங்கும்; இதனால் சனிக்கிழமை தாள் எழுதுவதில்லை. எப்படித் தேற முடியும்? அப்போது எல்லாத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால்தான் தேர்வு பெற்றதாகக் கருதப்பெறும். இந்தப் பெண்ணைக் கேட் டேன்: . ஏனம்மா, உனக்குதான் செவ்வாயன்றுதான் தேர்வுகள் தொடங்குகின்றன என்பது தெரியுமே. இந்த ஏற்பாட்டினால் சனிக்கிழமையும் தேர்வு இருக்கும் என்று. தெரிந்தும் ஏன் திரும்பத் திரும்ப வருகின்றாய்?’ என்று. அந்த மாணவி சொன்னாள்: ஐயா, தேர்வுக்குப் பணம் நி-24 - - . . . . . .......; .4.

#