பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 நினைவுக் குமிழிகள்-3 செலுத்தும் அன்று தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறிக்கப் பெறுவதில்லை. இறையருளால் திங்களன்று தொடங்கும் வாய்ப்பு இருக்கும் என்று சமய நம்பிக்கை போன்ற ஒரு வித நம்பிக்கையால் தேர்வுகள் எழுதி வரு கிறேன். தேர்வுகள் நடைபெறும் நாட்கள் தெரிந்த பிறகு சனிக்கிழமையும் தேர்வு உண்டு என்று தெரிந்தும் தேர்வுகள் எழுதுவதைத் தவிர்க்காமல் எழுதி வருகின் றேன். தேர்வுகள் எழுதுவதில்ாவது நல்ல பயிற்சி ஏற்படு மல்லவா?’ என்றாள். 'அம்மா, உன் நம்பிக்கையைப் பாராட்டி ஆண்டவன்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்?' என்று வாழ்த்தினேன். இப்படி பி. டி. மாணவர்களில் பல ரகம். அதன்பிறகு திங்களன்று பி. டி. தேர்வுதொடங்கப் பெறுகின்றதா என்பதை அறிந்து கொள்ள முயலவில்லை - திருப்பதிக்குப் போய்விட்ட தால் பயிற்சிக் கல்லூரி வாழ்வில் என்னைவிடப் பதினைந்து ஆண்டு மூத்தவர்கட்கும் ஆசிரியராக இருக்கும் பேறுபேற்றேன். ロ 그 江Q 1954-என்று நினைக்கின்றேன்; மாதம் நினைவு இல்லை. என் மகன் இராமலிங்கத்திற்கு வயது ஐந்து நடைபெறுகிறது. இந்த வயதில் நல்லாசிரியரைக்கொண்டு கல்வி தொடங்க எண்ணினேன். வேங்கடசாமி நாட் டாரின் தலையாய மாணாக்கர் வீ. உலக ஊழியனாரைக் கொண்டுதான் தொடங்க வேண்டும் என்று உறுதி செய் தேன், திரு ஊழியனார் சிறந்த புலவர்; வாக்கு வன்மை துடைத்தவர்: ஒழுக்க சீலர். அப்போது அவர் சேலம் கல்லூரியில் தமிழ்விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரை என் மகனுக்குக் கல்வி தொடங்குமாறு கேட்டேன். ஒப்புக்கொண்டார். எட்டு இல் ஒரு:வெண் பட்டும் ஓர் அங்க வஸ்திரமும் (பட்டு) வருமாறு எழுதினேன். குறிப்பிட்ட நாளில் அவரும் சர்ந்தார். கல்வி தொடங்கும் நாளில் ஒரு முப்பது