பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 நினைவுக் குமிழிகள்-3 (Footwear) வந்திருந்தார். சங்கத்திற்குள் எழுந்தருளி யதும் முதலில் நடையன்களைப் பத்திரப்படுத்த. வேண்டும்.’’ என்றார். அங்கிருந்தவர்கள் அவற்றை. ஒருவரும்எடுக்கார்; பாதுகாப்பாகஇருக்கும்’ என்றார்கள். அடிகள் இதில் எனக்கு மிக்க அநுபவம் உண்டு. பத்திரப் படுத்தா விட்டால் எனக்குப் பேச்சே ஒடாது' என்று சொன்னவுடன் அவை பத்திரப்படுத்தப் பெற்றன. அப்பொழுது எனக்கு அடிகளாரின் கருத்து புலப் படவில்லை. அதன் பிறகு இரண்டு முறை திருமண நிகழ்ச்சிகட்குப் போனபோது புதியனவாக இருந்த நடையன்களை இழந்தேன். விருந்துண்டு வெளியில் கிளம்பும்போது இவற்றைக் காணாமல் தவித்தேன். யாரோ மறந்து மாட்டிக் கொண்டு போய் விட்டார் போலும் என்று நினைத்துக் கொண்டு வாளா இருந்துவிட்டேன். அடுத்த முறை இன்னொரு திருமணத்தில் இதே அநுபவம் ஏற். பட்டது. நான் அவற்றைத் தேடிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த செட்டியார் நண்பர் ஒருவர் நடையன்கள் புதியனவா?' என்று கேட்டார், ஆம்’ என்றேன். உடனே அவர், "ஒசிச் சோறு உண்டு விட்டு நடையன் களைக் களவாடி விற்பதற்காகவே சில களவாணிப் பயல்கள் வருகின்றார்கள்: புதிய நடையன்கள்மீது அவர்கள் கவனம் இருக்கும், இன்று அல்லது நாளை கல்லுக்கட்டிப் பக்கம் போனால் செருப்பு தைத்துக் கொண்டிருக்கும் ஒரு சக்கிலியிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இனி கூட்டங்களில் கலந்து கொள்ளப்போகும் போது புதிய நடையன்களுடன் வாராதீர்கள். கூட்டத்திற்குப் போவதற்கென்றே ஒரு சோடி பழைய நடையன்களை வைத்துக் கொள்ளுங்கள். செட்டி நாட்டில் இஃது ஒன்றே பெருங்குறை' என்றார். அவர் சொன்னபடியே, மறு நாள் கல்லுக்கட்டிக்குப் போகும்போது என்ன்ே அதிசயம்! முதல் நாள் இழந்த