பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் மணங்கமழ் பூவையும் மயிலும், தமாலக்காடும் வண்கிளியும், நீலவெற்பும் மடமான் கன்றும் இணங்குகட லுந்துகிரும் காரும் மின்னும், யமுனையெனும் திருநதியும் எகினப் பேடும், கணங்குழைய கோசலைதே வகிய சோதை கண்மணியும் பாவையும்போல் கமல வீட்டின் அணங்கரசி யுடன் குலவி ஆடீர் ஊசல்! அலங்கார மாயவரே ஆடீர் ஊசல் 11% இந்தப் பாடலைப் பாடி என்னை அநுபவிக்கச் செய்தது. இன்னும் என் நினைவில் பசுமையாகவே உள்ளது. இதை சொ. முரு. இசையுடன் பாடின பொழுதே அதன் பொதுப் பொருள் ஒருவாறு என் மனத்திற்குப் பட்டது. இதன் பிறகு பாட்டில் இணை இணையாக வரும் காட்சிகளை, மணங்கமழ் பூவையும் மயிலும்’ :தமாலக்காடும் வண்கிளியும்' நீலவெற்பும் மடமான்கன்றும்’ 'இணங்குகடலும் துகிரும்’ 'காரும் மின்னும்" * யமுனையெனும் திருநதியும் எகினப்பேடும்' கணங்குழைய கோசலை தேவகி யசோதை 'கண்மணியும் பாவையும் போல்’ என்ற தொடர்களில் தனித்தனி அழுத்தம் கொடுத்துச் சொற்களை நன்றாகப் பிரித்துக் காட்டினார். காயாம் பூமரம்-மயில், பச்சைக் காடு-கிளி, நீலவெற்பு-மட மான் கன்று, கடல் - பவளக்கொடி, மேகம்-மின்னல், யமுனை-அன்னப்பேடு-என்ற படிமக் காட்சிகள் என். மனத்தில் தோன்றின. கோசலை - இராமன், தேவகிகண்ணன், யசோதை-கண்ணன் இவை கண்மணியும் பாவையும்போல் இணைந்த காட்சிகளையும் உணரச் 4. அழகர் கலம்பகம்-45