உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 6 நினைவுக் குமிழிகள்-3 புலமையும் ஆய்வு மனப்பான்மையும் செழித்து வளர்ந்தன . தவிர, சா. கணேசன் அவர்கள் இல்லத்திற்குப் பின்புறத் தெருவில் என் வீடு இருந்தமையால் அவர்களை அடிக்கடிச் சத்திக்கும் பேறு பெற்றேன். சத்திக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு புதிய இலக்கியக் கருத்து அவர் திருவா யினின்று உதிரும்; அஃது என் சிந்தனையைத் துரண்டுவது மாகவும் அமையும். என்னுடைய நூல்களின் கைப்படிகளை அவருக்குக் காட்டாமல் வெளியிடுவதில்லை. என்னுடைய தமிழ் பயிற்றும் முறை என்ற பெரு நூல் வெளிவந்தது அவருடைய ஆசியால்தான் என்று கூறினால் அது மிகை படக் கூறியதன்று. அடுத்து ஜப்பார் மருத்துவமனையருகிலிருந்த ஒர் இல்லத்தில் பேராசிரியர் ஆ. முத்துசிவன் தங்கியிருந்தார். அவர் இல்லத்திற்குச் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவருடைய கவிதை” என்ற திறனாய்வு நூலாலும் வேறு ஒன்றிரண்டு நூல்களாலும் தமிழகத்தின் அறிஞர் பெருமக்களுக்கு இவர் நன்கு அறிமுகமானவர். மற்றொரு நாள் என்னுடன் எல்.டி. வகுப்பில் (1940-41) இல் பயின்ற Y. சொக்கலிங்கம்பிள்ளைபற்றிப் பலரிடம் விசாரித்து அவர் நகராண்மைக்கழக உயர் திலைப்பள்ளி யில் தற்காலிகத்தலைமையாசிரியராக இருந்ததை அறிந்து அவரை ப் பள்ளியில் சந்தித்து அளவளாவி மகிழ்ந்தேன். Y. சொக்கலிங்கம்பிள்ளை அமைதியான போக்குடை யவர்: பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், அவரது இல்லற வாழ்க்கை சரியாக அமையவில்லை என்பதை அறித்து மிகவும் மனம் கவன்றேன். இறுதிவரை அவர் மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை. கலியாணம் பண்ணியும் பிரமச்சாரி என்ற பழமொழிக்கு இணங்க அவருக்கு மாணி வாழ்க்கையே தலைவிதியாக அமைந்து விட்டது. - இவரைப் பார்க்கச் சென்ற போது இன்னோர். அறிய நண்பர் அறிமுகம் ஆனார். அவர் அப்பள்ளியில்