பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 நின்ைவுக் குமிழிகள்-; செய்தார். இப்படி இவர் பாடலை விளக்கினபோது ரசிகமணி டி. கே. சி, என் அரிய நண்பர் வீ. உலக ஊழியனார், லால்குடிப் புலவர் நடேச முதலியார் இவர் கள் தரும் விளக்கங்கள் நினைவிற்கு வருகின்றன. 口 鳢 口 டாக்டர் சுப்பிரமணியம் சிறந்த மருத்துவ வல்லுநர் என்பது செட்டிநாட்டு வட்டாரங்களில் அனைவரும் அறிவர். ஒரு நாள் மாலை அவரிடம் உரையாடிக் கொண் டிருந்தபோது மண்வேலை செய்து வாழ்க்கை நடத்தும் ஓர் ஒட்டன் தன் ஆறுவயது சிறுவன் ஒருவனைக் கூட்டிக் கொண்டு வந்தான். பையன் காலணாவை (பழைய மூன்று காசு) வாயில் போட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது அது தொண்டையில் சிக்கிக்கொண்டது என்றும், அதனால் அவன் இரண்டு நாட்களாக தண்ணீர் கூட. விழுங்க முடியாமல் தவிக்கின்றான் என்றும் கூறினான் அந்த மண் ஒட்டன். டாக்டர்.தொண்டை, மார்பு இவற்றைக் கை யினால் தடவிப் பார்த்து காசு மார்பருகில் செங்குத்தாக இருக்கவேண்டும் என்று உறுதி செய்து கொண்டார். ஒரு சிறிய உலோக இடுக்கியைத் தொண்டைக்குள் செலுத்தி லாவகமாக அந்த நாணயத்தைப் பற்றிக் கொண்டார். பையன் டாக்டர் கையை நன்றாகக் கடித்ததை யும் பொருட்படுத்தாத நிலை; உடலைக் கிள்ளி வலி யுண்டாக்கி வாயைத் திறக்கச் செய்து கையை விடுவித்துக் கொண்டு காசையும் விடுவித்தார். உடனே பையன் தண்ணீர் குடித்தான்; பன். உண்டான். ஏதோ பணம் கொடுக்க சுருக்குப் ன்பயைத் திறந்து பணம் எடுத்தான். டாக்டர் பீஸ் கொடுக்கின்றாயா? நீயே வைத்துக் 5. இந்தப் பாடலை எடுத்துக்கொண்டு திறனாய்வுப் பாடத்தில் படிமங்கள்imagery) பாடலில்அமை ந் திருக்கும் பாங்கைக் காட்டி விளக்கினேன். (திருப்பதியில்).