பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் ஜபல்பூர் பயணம் 377 கொள்' என்று சொல்வி அதை வாங்கவில்லை .டாக்டரின் திறமையையும் இரக்கக் குணத்தையும் கண்டு என் வாய் அவரை வாழ்த்தியது. குமிழி-151 44. என் ஜபல்பூர் பயணம் 1958-so ஆண்டு ஜூலை திங்கள் என்பதாக நினைவு. இந்திய அரசு கல்வித்துறையின் ஆதரவில் ஜபல்பூரில் அக்டோபர் 1958இல் நடைபெறவிருக்கும் இந்தியமொழிகள் பயிற்றல் பற்றிய கருத்தரங்கில் பங்கு கொள்ளுமாறு அழைப்பு வந்தது. இருவழிப் பயணச் செலவு. உண்டி, உறையுள் அரசின் பொறுப்பு என்றும் அந்த அழைப்பில் குறிப்பிடப் பெற்றிருந்தது. கல்லூரி நிர்வாகம் முதல்வர் திரு ப. துரைக்கண்ணுமுதலியார் பெய ரையும் என் பெயரையும் பரிந்துரைத்தது. ஒவ்வொரு பயிற்சிக் கல்லூரியிலிருந்தும் மொழி கற்பிக்கும் துறையில் பணியாற்றும் பேராசிரியரைப் பேராளராகப் பங்கு கொள்ள வேண்டும் என்பது. இந்திய அரசின் விருப்பம். அழைப்பு வந்த நாள் முதல் (ஜூலை) பயணத்திற்கு ஆயத்தம் செய்யத் தொடங்கினேன். ஜபல்பூர் குளிர் தேசப் புகுதியிலுள்ளதால் வெப்ப ஆடைகள் தேவைப் படும் என்று சொன்னார்கள். ஆகஸ்டு மாதம் திருச்சி சென்று கால் சட்டை, மேலங்கி (Coat), அவற்றிற்குப் பொருத்தமான பருத்தித் துணியாலான உள் சட்டை இவற்றைத் தயார் செய்தேன். ஆகஸ்டு இறுதியில் அவை என் கைக்குக் கிடைத்தன. அப்போது என் அன்னை, என்னுடன் வாழ்ந்தமையால் என், மனைவிக்குத் துணை