பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37& - - - - - நினைவுக் குமிழிகள்-3 யாக இருந்தார்கள், சிறுவர்களையும் துணைவியையும் விட்டுப் பிரியத் துணிவு வந்தது. சென்னைக்கு அப்பால் வடபுலங்களைக் காணாத எனக்கு இஃது ஒரு புதிய அநுபவமாகவும் இருக்கும் என்று கருதினேன்; அது நான் நினைத்தது போலவே இருந்தது. பயணத்தைப் பயன் பெறச் செய்து கொண்டேன். பன்மொழிப் புலவர் வே. வேங்கட ராஜுலு ரெட்டியா ருக்கு எழுதி இரண்டு பயணச் சீட்டுகளை (முதல்வருக்கும் சேர்த்து) வாங்கச் செய்து உறங்க வசதி உள்ள இருப்பூர்தி வண்டியில் இட ஒதுக்கீடு செய்து கொண்டேன். பயணத் தேதியன்று நானும் முதல்வரும் சென்ட்ரல் இருப்பூர்தி நிலையத்திற்கு வந்தோம். நிலையத்தில் சைதை ஆசிரியர்க் கல்லூரியிலிருந்து தமிழ்ப் பேராசிரியர் பொன்னப்பன், மதுரை தியாகராசர் பயிற்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், சங்கரநாராயணன், காட்டுப்பாடி அரசினர். பயிற்சிக் கல்லுரரித் தமிழ்ப் பேராசிரியர் வன்மீகநாதன், புதுக் கோட்டை அரசினர். பயிற்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் குமாரசாமி, சென்னை லேடிவெல்லிங்க்டன் பயிற்சிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியை E. T. பதுமாவதி அம்மையார் ஆகியோர் வந்திருந்ததைக் கண்டோம்; உரையாடி அளவளாவினோம். வன்மீகநாதன், பதுமாவதி அம்மையார், குமாரசாமி இவர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்தனர். நான், முதல்வர் முதலியார், பொன்னப்பன், சங்கர நாராயணன் ஆகிய நால்வரும். உறங்கும் பெட்டியில் சேர்ந்து பயணம் செய்தோம். வண்டி நள்ளிரவில் இட்டார்சி என்ற நிலையத்தை. அடைந்தது. வழியில் எத்தனையோ சுரங்கப்பாதைகளைக் கடந்தது; மலையுச்சியில் கடந்து சென்றதையும் கண் டோம். இட்டார்சியில் இறங்கித் தொடர் வண்டியைப் பிடித்து அதில் ஏறிக் கொண்டோம். இந்தப் பாதையில் ான் வாரணாசிக்கும் வண்டி ச்ெல்லுகின்றது என்பதை. ந்தோம் வழியில் ஏதோ ஒரு நிலையத்தில் வண்டி