பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் ஜபல்பூர் பயணம் - 379, ஜபல்பூரை நோக்கித் திரும்புகின்றது என்பதையும் தெரிந்து கொண்டோம். ஜபல்பூரில் இறங்கியதும் டோங்காவை அமர்த்திக் கொண்டு பயிற்சிக் கல்லூரி மாணவர் விடுதியை அடைந்தோம். இதுதான் நாங்கள் தங்குவதற்கும் உணவு கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப் பெற்ற இடம். வரவேற்பாளரிடம் நாங்கள் எங்கள் பெயர் களைப் பதிவு செய்து கொண்டதும், எங்கட்குத் தனித்தனி அறைகள் தரப் பெற்றன.அவ்விடங்களில் எங்கள் சாமான் களுடன் தங்கிக் கொண்டோம். ஐந்து நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றதாக நினைவு. இத்தகைய கருத்தரங்குகள் பலவற்றில் பிற். காலத்தில் திருப்பதியில் பணியேற்ற பிறகு பங்கு கொள் ளும் வாய்ப்புகள் இருந்தன. கருத்தரங்குகளில் ஏதோ சில புதிய கருத்துகள் பெற்றோம். பழைய கருத்துகட்குப் புதிய ஒளியும் தெரிந்தது. இப்பலனை விட புதிய இடத்தில் புதியவர்களுடன் உறவு. அவர்கள் பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ளுதல், நூலகங்களின் பாங்கு, மாணவர் விடுதிகளின் அமைப்பு முறை, அவர்கட்கு விடுதிகளில் அமைந்துள்ள பல்வேறு வசதிகள், அவ்வூரிலுள்ள அரும் பொருட்காட்சியகங்களைப் பார்த்தல், ஊருக்குள் அமைந் துள்ள அங்காடிவீதிகள், காய்கறி விற்பனை நிலையங்கள், பொதுவாக நகரிலுள்ள ககாதார வசதிகள் இவை அமைந்: திருப்பதையெல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது. நகரத். தின் சுகாதார வசதிகள் மன நிறைவு தருவனவாக அமைய வில்லை. முற்பகல், பிற்பகல்களில் இரண்டு அமர்வுகள் இருந் தன. மொழி பயிற்றலில் பல்வேறு கருத்துகள் தனித்தனி யாக ஆராயப் பெற்றன. பெரும்பாலும் முற்பகல் அமர்வு களில் மொழி அறிஞர்களின் சொற் பொழிவுகளும் பிற்பகல் அமர்வுகளில் கலந்தாய்தல்களுமாக(Discussions), அமைந்திருந்தன. இந்த ஏற்பாடுகள் மனநிறைவு தருவன: