பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் ஜபல்பூர் பயணம் 38 f திரு. சங்கர நாராயணன், திரு. பொன்னப்பன், திரு. வன்மீக நாதன், திரு. குமாரசாமி (நாகர்கோ விலைச் சார்ந்தவர்), குமாரி பதுமாவதி அம்மையார், நான், எங்கள் முதல்வர் திரு ப. துரைக்கண்ணு முதலியார் ஆகிய நாங்கள் நன்கு கலந்து பழகினோம். ஆந்திராவி லிருந்து ஒர் இளம் கதோலிக்கக் கன்னித் துறவி வந்திருந் தார். அவர் இரவில் கன்னித் துறவிகள் வாழும் இடத்தில் தங்கியிருந்தார். பகலில் மதிய ஒய்வு நேரத்தில் பதுமாவதி அம்மையார் அறையில் தங்கியிருப்பார்.அவரும் எங்களுடன் நன்கு கலந்து பழகுவார். அவர் தெலுங்கு மொழி' பயிற்றும் பேராசிரியையாகப் பயிற்சிக் கல்லூரியில் பணி யாற்றுபவர். பதுமாவதி அம்மையார் அறைக்கு தாங்கள் யாரேனும் போக நேர்ந்தால் (மாலை நேரங்களில்): இனிப்பும் காரமும் வழங்குவார். ஏதோ மாதக் கணக்கில் தங்குவதுபோல பெரிய பெரிய தகரக் கலன்களில் இனிப்புப் பொருள்களையும் காரவகைகளையும் மிக அதிகமாகக் கொண்டு வந்திருந்தார். எங்களுள்ளும் பொன்னப்பன், சங்கர நாராயணன், நான் ஆகிய மூவரும் மிகவும் நெருங்கிப் பழகுவோம். சங்கர நாராயணன் நல்ல கவிஞர்; விரைந்து பாடல்கள் இயற்றும் வேந்து. திரு. பொன்னப்பன் உணர்ச்சிமிக்கவர். (இன்று அவர் இல்லை; சிவப்பேறு அடைந்து விட்டார்). இவர் காலஞ் சென்ற பொ. திரிகூட சுந்தரம் பிள்ளையின் நெருங்கிய உறவினர். ஒரு நாள் மாலை இருட்டு வரும் வரையிலும் இருந்து பொன்னப்பனும் சங்கர நாராயண னும் புகைத்துக் கொண்டு இருப்பூர்தி நிலையத்தில் தண்டவாளங்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் காலம் கழித்து வருகையில் இரண்டு வண்டித் தொடர்கள் சேர்க்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் (கும்மிருட்டில்) இரண்டு தொடர்களுக்கும் இடையில் அமர்ந்திருந்தனர்; வண்டித் தொடர்கள் இணைவது. தெரியவில்லை. தெய்வாதீனமாக இறுதி நொடியில்