பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் நெல்லை நிகழ்ச்சிகள் 385 உணவை முடித்துக் கொண்டு அன்றிரவே இருப்பூர்தி வண்டியில் ஏறிக் காரைக்குடி திரும்பினேன். 1960-மார்ச்சு முதல் வாரத்தில் மீண்டும் ஒருமுறை நெல்லை மாநகருக்கு வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்போது 1959-இல் பழக்கமான திரு. அ.க. நவநீத கிருட்டிணன் தங்கள் பள்ளி ஆண்டு விழாவில் பேச வேண்டும் என்று எழுதியிருந்தார்; இதற்காக நெல்லை சென்றேன். ஓர் உணவு விடுதியையொட்டிய தங்கும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். S. R. சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகத்திற்கும் என் வருகையைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். நெல்லைக்கு வந்த அன்று மதியத்தில் S.R.S. பதிப்பகத்தின் உரிமையாளர் திரு செங்கையாபிள்ளை தம் வீட்டில் ஒரு விருந்து அளித்தார். விருந்துண்ட பிறகு மறுநாள் செந்திலாண்டவனைத் தரிசித்து வருவதற்குக் கார் வேண்டும் என்றேன். தருவதாக ஒப்புக் கொண்டார். பள்ளியில் ஆண்டு விழா பேச்சினை முடித்துக் கொண்டு உணவு விடுதி அறைக்குக் கூட்டி வந்தார் திரு. நவநீதகிருஷ்ணன். அப்போது கவிதையனுபவம் (படங்களுடன்) என்ற என் நூலின் கைப் படியைக் கொண்டு வந்திருந்தேன். சைவ சித்தாந்த நூற். பதிப்புக் கழகத்தின் உரிமையாளர் திரு. வ. சுப்பையா பிள்ளை நவநீத கிருட்டிணன் உறவினராதலால் அவருக்கு இந்த நூலை வெளியிடப் பரிந்துரைக்குமாறு வேண்டி னேன். நூலின் சில முக்கியமான பகுதிகளை அவருக்கு படித்துக் காட்டினேன். அவரும், 'இது நல்ல நூல், கழகம் வெளியிட்டால் அவர்கட்கும் நல்லது; உங்கள் புகழும் பெருகும். நாளை ஊர் செல்லுவதற்கு முன் கைப்படியைப் பெற்றுக் கொள்ளுகின்றேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது திரு. செங்கய்யா பிள்ளை விடுதிக்கு வந்தார்.வந்தவர், சிரீவைகுண்டத்தில் ஓர் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் திரு :ெ 1.மு. பாஸ்கரத் தொண்டைமான் பேசுகின்றார்.பேராசிரியர் நி-25