பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.நெல்லை நிகழ்ச்சிகள் 3.89. படுகின்றது. இந்த ஈடுபாடு அவர் பக்தியைக் குறைக்குமா? குறைக்காதன்றோ? அது போலவே ரெட்டியாரின் அறிவியல் நோக்கு கவிதை அநுபவத்தைக் குறைக்காது என்று கொள்ளலாமன்றோ?-என்று கூறினேன். திரு தொண்டைமான் என் பேச்சை நன்கு கவனித் தார்; கவுண்டர் அய்யா அவர்களும் இதில் ஈடுபட்டார். உடனே சொன்னார்: . நான் வருவாய்த்துறை ஆய்வாள ராக இருந்த காலத்திலிருந்து மாவட்ட ஆட்சியாளராக வந்த வரையில் என்னைச் சுற்றிலும் ஒரு சிறு கூட்டம்; இலக்கியரசிகர்களின் கூட்டம். நான் சொல்லுவதற்கெல் லாம் "ஆமாம் போட்டு வீரவழிபாடு நடத்துவார்கள். தாங்கள் சொல்லுவதுபோல் ஆதிதாளம் கொட்டுவார் கள். இதில் எனக்கு ஒருவித மயக்கம்; போதை: இப்போது நீங்கள் என் கண்களைத் திறந்து விட்டீர்கள். சிற்ப நோக்கு பக்தியைக் குறைக்காததுபோல் அறிவியல் நோக்கும் கவிதை அநுபவத்தைக் குலைக்காது என்பதை உணர்கின்றேன்' என்றார். அருகிலிருந்த கவுண்டர் அய்யா அவர்களும் தம் தாளத்தை மாற்றிக் கொள்ளு. கின்றார். ஆமா, ஆமா, நம் ரெட்டியாரின் அறிவியலறி வால் அவருடைய கவிதையதுபவம் குறையவில்லை; மிகு கின்றது' என்று கூறினார். (5) எனக்கும். மீண்டும் ஒரு யுக்தி தோன்றியது. சொன்னேன் : மருத்துவர் ஒருவர் தம் துணைவிக்கு அறுவை சிகிச்சைமூலம் பிரசவம் செய்து குழந்தையையும் தாயையும் பிழைக்க வைக்கின்றார். இது காரணம் பற்றி அவர் தம் துணைவியார்மீது கொண்டுள்ள காதல் உணர்வு குறையுமா?’ என்று முத்தாய்ப்பாகக் கூறி இருவரையும் என் வசத்திற்குக் கொணர்ந்தேன். இதற்குள் கார் சிரீவைகுண்டத்தை அடைந்தது; பள்ளியின் முன்னர்ல் கார் வந்து நின்றதும் திரு ஆதிக்ாதன் எங்களை வரவேற்றார். என்ன்ைப்பார்த்து நீங்கள்