பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

зво நினைவுக் குமிழிகள்-3 வந்தது பெருமகிழ்ச்சி. மேலே அறைக்குப் போகலாம்” என்றார். நான் செந்தில் நாதனின் வழிபாட்டுக்குப் போகின்றேன்’ என்று கூறி என்னுடன் வந்த இரு பெரியார்களையும் மாடி அறைக்கு அனுப்பி விட்டு நான் காரில் அலைவாய் சென்றேன். திரு.கூத்த நயினார் குறிப் பிட்ட குருக்களைக் கண்டு பேசினேன். அவர் S.R.S. காரைக் கண்டதும் மிகவும் அன்புடன் வரவேற்று நன்றாகச் சுவாமி தரிசனம் செய்து வைத்தார். சந்தனம், விபூதி, குங்குமம் முதலிய பிரசாதங்களை வழங்கினார். செந்தில் குமரன் தரிசனம் அருணகிரியாரின் கந்தரலங். காரத்தை நினைக்கச் செய்தது. பல பாடல்கள் என் சிந்தையில் எழுந்தன. மனமுருகிப் பாடினேன். பல பாடல் களில், х - நாளென் செயும்; வினை தானென் செயும் எனை நாடிவந்த கோளென் செயும்:கொடுங் கூற்றென் செயும்; கும ரேசர்இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே." விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள்: மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனும் நாமம்:கண் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடிவேலும்செங் கோடன் மயூரமுமே.” டிப் பல பாடல்களைப் பாடிய பின்,