பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் நெல்லை நிகழ்ச்சிகள் 391 முன்னம் நின்அன்னை அமுதுாட்டி மையிட்டு முத்தம்இட்டுக் கன்னமும் கிள்ளிய நாளலவே என்னைக் காத்தளிக்க அன்னமும் மஞ்ஞையும் போல்இரு பெண்கொண்ட ஆண்பிள்ளை, நீ! இன்னமும் சின்னவன் தானோ! செந்துரில் இருப்பவனே! என்ற படிக்காகப் புலவரின் பாடலை சண்முகநாதன் சந்நிதி முன் மனமுருகப் பாடி உள்ளம் உருகினேன். - - - அதன் பின்னர் குருக்களிடம் விடைபெற்றுக் கொண்டு சிரீவைகுண்டம் வந்து சேர்ந்தேன். நேரம் பகல் 12-30, கூட்டம் முடியும் நேரம்; நன்றியுரை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டத்தின் பின்புறமாக உட்கார்த் தேன். கூட்டம் கலைந்தது. ஆதிநாதன் விருந்தினர்களை இட்டுக் கொண்டு தம் வீட்டிற்குச் சென்றார். நானும் அவருக்கு விருந்தினன். ஐந்தாண்டுகட்கு முன்னர் காரைக் குடி வந்திருந்தார்; என் அண்டைவீட்டு கே. நாராயணனின் விருந்தினர். அதன் பிறகு இப்பொழுதுதான் பார்த்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. அன்று விருந்து பலம். உணவு வகைகளைப் பரிமாறும் போது நெளியமுது (சாம்பார்) சாத்தமுது(ரசம்), திருக்க(ண் அமுது)ன்னல் அமுது இப்படியெல்லாம் உணவுப் பொருள்களின் சம்பிரதாயப் பெயர்கள் அடிபட்டன. அப்போது அச் சம்பிரதாயப் பெயர்களை நான் அறியாத நிலை, அப்பக்கத்தில் கம்பராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவரும் ஆழ்வார் பாசுரங்களில் நன்கு ஆழங்கால் பட்ட வருமான வைணவப் பெரியார் ஒருவர் வந்திருந் தார். அவரை எனக்கும் என்னை அவருக்கும் அறிமுகப் படுத்தி வைத்திருந்தார் ஆதிநாதன் முன்னரே. அந்தப் புதியவருக்கு வயது 75 இருக்கும்; எனக்கு அப்போது