பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 நினைவுக் குமிழிகள்-3 வயது 41 பந்தியில் எதிர் எதிராக உட்கார்ந்து சாப்பிட் டோம். நான் எப்போதும் குறைவாக-அளவாக உண்பவன். அந்தப் பெரியவர், என்ன ரெட்டியார், சிறு பிள்ளை மாதிரி மிகக் குறைவாகச் சாப்பிடுகின்றீர்கள். எப்படி வேலை செய்ய முடியும்? சக்தி வேண்டாமா?' என்று செல்லமாகக் குழைந்து பேசினார். 'ஐயா இது தான் அளவு' என்று சொன்னேன். விருந்து முடிந்தது. பத்து நிமிடத்திற்குள் நான், தொண்டைமான், கவுண்டர் அய்யா-நெல்லைக்குத் திரும்பினோம். அப்போது மாலை மணி 3-50. திரு. நவநீத கிருஷ்ணன் என் அறைக்கு வந்திருந்தார். பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். கவிதை யதுபவம் நூலின் கைப்படியைப் பார்த்தார்; அதிலுள்ள படங்களையும் பார்த்தார். நானும் நூலைப் பற்றி விளக்கி னேன். கழகவாயிலாக வெளிவர ஏற்பாடு செய்யுமாறு: கேட்டேன். அவரும் கைப்படியை வாங்கிக் கொண்டு ஆவன செய்வதாக வாக்குறுதி தந்தார். கழகம் மறு ஆண்டே (1961) நூலை வெளியிட்டு விட்டது, நூல் வெளி வந்து சில ஆண்டுகளில் நவநீத கிருஷ்ணன் சிவப்பேறு அடைந்தார்; ஒய்வு பெறுவதற்கு முன்னரே காலகதி அடைந்தார். ஏறக்குறைய என் வயதையுடையவரே (41). அடுத்து சில ஆண்டுகளில் தொ. மு. பாஸ்கரத் தொண்டை மானும் பரமபதித்து விட்டார். இச்செய்திகள் தாமத மாகத்தான் எனக்கு எட்டின. மிகவும் வருந்தினேன்.