பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 நினைவுக்குமிழிகள்-; நான் இறந்த பிறகு வெண்பட்டை என் உடலில் போர்த்தி விடு. சுடுகாடு போகும் போது வேறு பருத்தியா லான கோடியைக்கொண்டு போர்த்தி பட்டாடையை எடுத்துவிடு. உனக்கும் சிறுவர்கட்கும் சட்டை தைத்துப் போட்டுக் கொள்க' என்று பணித்தார். எனக்கு இரண்டு .ஜிப்பாக்களும் சிறுவர்கட்கு ஆளுக்கொரு ஜிப்பாவுமாகத் தைத்துக் கொண்டேன். இதற்கிடையில் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்ன தாக பொட்டனத்திலிருந்து என் மனைவியின் தாயாரும், எருமைப்பட்டியிலிருந்து என் மனைவியின் அண்ணன் முதல் மனைவியும், ஆலத்துடையாம்பட்டியிலிருந்து என் மனைவியின் அத்தை மகன்மு.கிருஷ்ணசாமிரெட்டியாரும் வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் ஒரு நாள்தான் பேசி னார்கள். அதன் பிறகு மயக்கம் (Coma) உண்டாகி விட்டது. பேச்சும் நின்றது. இப்படியே ஒன்றிரண்டு. நாட்கள் சென்று இறுதியில் ஆவியும் நின்றது. முப்ப தாண்டுகள் செய்து வந்த சிவ பூசையும் நாவினால் இடை விடாது நவிற்றிய ஐந்தெழுத்து மந்திரமும் அவர்களைச் சிவப்பேறு அடையச் செய்திருக்கும் என்பது என் நம்பிக்கை. . காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே - , , , : -தேவாரம் 3.49:1 என்ற சம்பந்தரின் திருவாக்கும் நினைவுக்கு வருகின்றது. பூதவுடல் வீட்டிலிருந்து சுடுகாடு போகும் வரையிலும் ரியூட்டும் வரையிலும் தக்க ஆட்களைக்கொண்டு s s? به بیشتر آنه w K. சுப்பிரம்னிய இவர் شد. این سند: