பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அம்மானின் மறைவு 39 & என்ற குறளை நினைந்து துக்கத்தை மறக்க முடியு மென்றாலும் மறக்க முடியுமா? கால வெள்ளத்தில் தானாகக் கரைய வேண்டியதல்லவா இது? மை ஆடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும் செந்நீ ஐயா நின் மாயை உருவெளித் தோற்றம்; அகிலத்து உள்ளே மெய்யாய் இருந்தது நாள்செல நாள்செல வெட்டவெறும் பொய்யாய் பழங்கதை யாய்க்கன வாய்மெல்லப் போனதுவே." என்ற பாடல் இன்றளவும் மனத்தை நெருடிக் கொண்டே உள்ளது: மனத்திற்கு ஆறுதலும் அருகின்றது. குமிழி-134. 47. என் அம்மானின் மறைவு 1959-ஜூலை-ஆகஸ்டு என்பதாக நினைவு. பெரகம்பி சி. அரங்கராஜு (என் ஒன்றுவிட்ட சிற்றப்பா வின் மூன்றாவது மகன்) திருச்சியிலிருந்து தொலைபேசி மூலம் என் அம்மான் மறைந்துவிட்ட செய்தியை அறிவித்து உடனே புறப்பட்டு வருமாறு வேண்டிக் கொண்டான். என் அன்னையார் மறைந்த பிறகு ஒருவித் அமைதி என்னிடம் குடி கொண்டுவிட்டது. மலை கலங் கினும் நிலை கலங்காத நிலை அமைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து பெரகம்பிக்கு ஒடவில்லை. చే . பட்டினத்துப் பிள்ளையார் பாடல்-:48,