பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்குடியில் பதவி விலகல் £13" நம்பிக்கை இல்லை. நல்ல சோதிடர் ஒருவரை அணுகிப் பலன் கேட்கலாம் என்று எனக்குத் தோன்றியது. நகைக்கடை M. S. இராசமாணிக்கம் செட்டியார் மூலம் ஏற்பாடு செய்தேன். முத்துப்பட்டினத்திலுள்ள அவர் வீட்டுக்குச் செனறோம்; சோதிடர் அங்கு வந்தார். நன்றாக ஆய்ந்து சொன்னார். திருப்பதிப் பணியை ஒப்புக் கொள்வது சிறந்தது. எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும். சிறுவர்களின் கல்வி முன்னேற்றத் திற்கும் அந்த இடம் சிறப்பாக இருக்கும். தவிர, புண்ணிய rேத்திரத்தில் வாழ்வதே ஒரு சிறந்த பேறு. என்றெல்லாம் பலன் சொன்னார். என் மனைவியின் மனம் ஒருவழியாகச் சரிப்பட்டுவிடும் என்ற குறிப்பு அவள் முகத்தில் தெரிந்தது. இல்லத்திற்குத் திரும்பியதும் அவள் மனம் இரங்கியது. இராமலிங்கம் எஸ். எஸ். எல். சி. தாண்டும்வரைக்காரைக்குடியிலேயேகுடும்பம்இருக்கட்டும். அதன்பிறகு இறைவனே வழிகாட்டுவான் என்ற முடிவுக்கு, வந்தோம். நானும் செப்டம்பர் (15 நாட்கள்), டிசம்பர். சனவரி (15 நாட்கள்), ஏப்ரல்-மே-ஜூன் (2; மாதம்) காரைக் குடியில்தான் இருப்பேன் என்ற நிலையையும். அவளுக்கு எடுத்துச் சொன்னேன். ஒருவிதமாக ஒப்புக் கொண்டாள், பழ. கோ. நாகப்பச் செட்டியார் கடையில் மாதந், தோறும் என் மகன் கொண்டு வரும் சீட்டுப்படிமளிகை சாமான்கள் அனுப்புமாறும், இவை தவிர ரூ. 250/-மாதந்: தோறும் தருமாறும், மளிகைச் சாமான்கள் அனுப்பிய கணக்கு மாதாமாதம் தீர்க்கப்பெறும் என்றும் சொல்லி ஏற்பாடு செய்து கொண்டேன். ரெங்கூன் ஹால் கே. சுப்பிரமணிய முதலியாரிடமும் தேவைப்பட்டால் பண உதவி செய்யுமாறும், M. S. இராசமாணிக்கம் செட்டியாரிடமும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்யுமாறும் கேட்டுக்கொண்டேன். நாடோறும் பிள்ளை களின் தனிப்பயிற்சிக்காக இல்லத்திற்குவரும் A.இராமசாமி