பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-414 - நினைவுக் குமிழிகள்-3 அய்யரிடமும் என் குடும்பத்தைக் கவனிக்குமாறு சொன் னேன். இவை எல்லாம் நான் இல்லாவிட்டாலும் சரியாக நடைபெறும். குடும்பத்தில் நான் இல்லாத குறை ஒன்றைத் தவிர, ஏனையவை தவறாது நடைபெறும் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை. . இதற்கிடையில் திருவேங்கடாச்சாரி ஒரிரவு பிரிவுபசார விருந்து அளித்தார். எங்கள் கல்லூரித் தோழப் பேராசிரி யர்களில் இவர் ஒருவரே நன்கு படித்த பேராசிரியர்; நாலும் தெரிந்தவர். ஆய்வில் பெருவிருப்பம் உடையவர்; அறிவு வேட்கை இவர்தம் துடிப்பு. என்னுடைய இயல்பும் இதுவே. இதற்கு அடுத்து ஓரளவு அறிவு நாட்டம் உள்ள வர் திரு V. N. சுப்பிரமணியம் அவர்கள்; சதா ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று பேசிக் கொண்டிருப்பாரேயன்றி உருப்படியாக ஒன்றும் செய்வதில்லை. ஏனைய ஆசிரியர் கள் வகுப்பில் பாடங் கற்பிப்பதற்கு வேண்டியவற்றை மட்டிலும்தான் சிந்திப்பவர்கள். அதற்குமேல் இவர்கள் அறிவு நாட்டம் உயர்வதில்லை. திருவேங்கடாச்சாரி பல்லாண்டுகள், சென்னை தியாகராய நகர் இராம கிருஷ்ணர் உயர்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றியவர். ஆனால், உண்மையில் ஒரு வரலாற்றுப் பேராசிரியரே. முதன்முதலில் வரலாறு, புவியியல்’ இந்த இரண்டு பாடங்களுக்குப் பதிலாக சமூக இயல்’ என்ற புதிய பாடம் உயர்நிலைப் பள்ளிப் பாடத் திட்டத்தில் இடம்பெற்ற காலத்தில் ஒன்று முதல் ஆறு பாரங்களுக்கு சமூக இயல் பாடநூல்களை எழுதிப் பெரும் புகழ் பெற்ற வர். முதன்முதலாக இப் புதிய பாடம் பாடத் திட்டத்தில் இடம்பெற்ற காலத்தில் இது வாதத்திற்கு இடம் தந்தது. பல பேரறிஞர்கள் இது தேவை இல்லாத, கவைக்குதவாத பாடம் என்று வாதித்தன்ர்:எதிர்த்தனர்; கண்டனம் தெரி னர்.கல்கிஆசிரியர்ரா.கிருஷ்ணமூர்த் தி நகைச்சுவைதரு கடலாக எழுதியது(1945-46)இன்றும் என் நினை . . அவர் எழுதியது: மீன்பிடிக்கும்