பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 நினைவுக் குமிழிகள்-; பல ஆங்கில நூலாசிரியர்கள் தம் நூல்களில் தெரிவித்த் உயர் கருத்துகளைத் தமிழில் அமைத்துக் காட்டும்போதும், நான் ஆங்கில நூல்களிலிருந்து திரட்டிய அறிவைப். பொருத்தமான இடத்தில் அமைத்துக் காட்டும்போதும். இருவருமே என் திறனைக் கண்டு மகிழ்ச்சியடன் பாராட்டு வார்கள். நீங்கள் பல்கலைக் கழகத்தில் இருக்கும். சூழ்நிலை ஏற்பட்டால் சிறப்புடன் திகழ வழியமையும் என்று அடிக்கடிச்சொல்வார்கள். இறையருளால் திருப்பதி யில் அந்த வாய்ப்பு ஏற்பட்டது. நான்காண்டுக்கு முன்னர் (1985) திரு V. N. சுப்பிரமணியம் இறைவன் திருவடி சேர்ந்தார் . நான் காரைக்குடிப்பணியைத் துறத்தல் உறுதியா யிற்று. ஒரு மாதப் பழக்கத்தான். தமிழ்த்துறை மாணாக் கர்கள் முதல்வர் தலைமையில் ஒரு சிறு விழா அமைத்து அதில் வழியனுப்புப் பாடல்கள் பாடித் தம் மகிழ்ச்சியைப் புலப்படுத்திக் கொண்டார்கள். அந்த ஆண்டு மாணவராக இருந்த ரெ. சிங்கார வேலன் ஒரு சிறந்த கவிஞர்,விரைந்து கவி இயற்றும் வேந்து. ஜூலை 30தேதி முற்பகல் 11-மணிக்கு இவ்விழா நடை பெற்றது. பிற்பகல் எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றேன். இல்லத்தில் பெட்டி, படுக்கைகளை இரண்டு நாட்கள் முன்னதாகவே தயாரில் வைத்திருந்தேன். இங்கிருந்தே சான்றிதழ்களின் நகல்கள் (அசல்களுடன்) சேரும் கடிதம் முதலியவற்றைத் தயாரித்து வைத்திருந் தேன். இறைவன் திருவருளை நினைந்த வண்ணம் ஒரு குதிரைவண்டி அமர்த்திக் கொண்டு இருப்பூர்தி நிலையம் வந்து சேர்ந்தேன். இராமேஸ்வரம் விரைவு வண்டியில் ஏறி விழுப்புரம் வந்து அடைந்தேன். அதிகாலையில் புறப்படும் வண்டி புறப்பட்டு விட்டதால் 10-மணிவண்டியில் புறப்பட ாடியதாயிற்று. அங்கிருந்து விழுப்புரம்-காட்டுப்பாடி ஞ்சரில் ஏறி இரவு காட்டுப்பாடியை அடைந்தேன். வண்டி மாறி அதிகாலை 2-3 மணி, சுமாருத். به خانه های این م.: : :