பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗罗 - நீணைவுக் குமிழிகன்-3 என்ற பாரதியார் காட்டும் அநுபவத்தை நாடோறும் அதுபவித்து மகிழ்வேன். நான் காரைக்குடி வந்து ஒன்றிரண்டு மா த ங் களுக்குள் துறையூரில் என்னிடம் நெருங்கிப் பழ கி ன மெளன சாமியார் ஒருவர் வருவதாகக் கடிதம் எழுதியிருந், தார். இவர் பேசுவதில்லை. எண்ணங்களை எழுதிதான் காட்டுவார். இவன்ர இருப்பூர்தி நிலையத்திலிருந்து இட்டுக் கொண்டுவந்து இல்லத்தில் விருந்தினராக வைத்திருந்தேன். நான்கு நாட்கள் தங்கியிருந்ததாக நினைவு. தங்குவதற்கு மாடியை ஒதுக்கித் தந்திருந்தேன். இந்தச்சமயத்தில் ஆகஸ்டு-செப்டம்பரில் இரண்டு வாரம்(?). சா. கணேசன் அவர்கள் காரைக்குடிக் காங்கிரசின் ஆதரவில் நூற்பு வேள்வி ஒன்று நடத்திவந்தார். ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் யக்ஞத்தில் கலந்து கொண்டு. தக்ளியிலும் இராட்டையிலும் நூல் நூற்றது பொது மக்களுக்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. எதைச் செய்தாலும் செய்வன திருந்தச்செய்’ என்பது இவர்தம் தனிச்சிறப்பு. திறந்து வைப்பதற்குச் சென்னை மாகாண முன்னாள் தலைமையமைச்சர் திரு ஒ. பி. இராமசாமி ரெட்டி யார் வந்திருந்தார்கள். கல்லுக்கட்டியில் கொப்புடையம்மன் கோயிலுக்கு எதிரில் மணிக் கூண் டிற்கும் கி. நாராயணன் செட்டியார் வீட்டிற்கும் இடை யில் பெரிய அலங்காரக் கொட்டகை ஒன்று அமைத்து அதில் இந்த வேள்வி நடைபெற்றது . ஒருநாள் ஞாயிறன்று காலையிலேயே மெளனசாமிக்கு. அளிக்கும் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். என்று சா. க. வை வேண்டிக் கொண்டேன். பகல் பன்னிரண்டு மணி சுமாருக்கு நேரில் வந்து அழைத்துப் போவதாகவும் சொல்லியிருந்தேன். விருந்து சிறிய விருந்துதான். தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், பருப்பு, சாம்பார், ரசம், தயிர், ஒரு கூட்டு, 2 கறிகள், அப்பளம், மெதுவடை, சேமியா பாயசம் இவை தாம்