பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 名尘 நினைவுக் குமிழ்கள்-3 அருமையாக அமைந்திருந்தன. வெள்ளை சாதமும் தும்பை மலர்போல் குழையாமல் பதமாக இருந்தது. சா.க. அரிசி யின்மீது கவர்ச்சியுற்று எந்த ஊர் அரிசி? என்று வினவி னார். துறையூருக்கு 10 கல் தொலைவிலுள்ள சோபன புரத்து விளைவு என்று கூறினேன், நல்ல பசி நேரம்; நன்றாகச் சுவைத்துச் சாப்பிட்டார். சுவாமிகளும் நன்கு உண்டார்கள். இவர்கள் மீது உள்ள கவனத்தினால் நான் சுவைத்துஉண்ண முடியவில்லை. செட்டி நாட்டில் பல்வேறு வகையான உணவுகளை உண்ட சா. க. வுக்கு எங்கள் விருந்து பிடித்தது. சத்துவ உணவு; காரம் அதிகமில்லாதபடி இருந்தது. சா.க. சைவ உணவு கொள்பவராதலால் உணவு அவருடைய சுவைக்குத் தக்கவாறு அமைந்திருந்தது. சேமியா பாயசம் மிகச் சிறப்பாக இருந்தது. தாம்பூலம் தரிப்பவராதலால் பிஞ்சு வெற்றிலை, ఢ! T&F ప}{f சுண்னாம். வாசனைப் பாக்கு வைத்திருந்தேன்; புகையிலை போடாதவர். பின்னர் சா.க. விடைபெற்று வீடு சென்றார்கள்...பக்கத்தில்தான் அவருடைய வீடு. வீடு வரை சென் விட்டு வந்தேன். சா. கவும் சுவாமிகளும் எங்கள் வீட்டு விருத்து கொண்ட தால் 'என்ன மாதவம் செய்ததோ இச்சிறு குடில்?’ என்று பரந்தாமன் விருந்து உண்ட அன்று விதுரன் பெற்ற மகிழ்ச்சியைப்போல் நானும் பெரும் பேறு பெற்றேன். 葱 மறுநாள் சுவாமிகள் சென்னை போகவேண்டும் என்று விருப்பத்தைத் தெரிவித்தார்கள் ஒரு பயணச் சீட்டுமட்டி லும் வாங்கித்தந்தால் போதும் என்றார்கள். நான் அவரை இருப்பூர்தி நிலையத்திற்குச் சென்று பயணச்சீட்டு வாங்கித் தந்தேன்; வண்டியிலும் ஏற்றிவிட்டேன்.செலவுக்குப் பத்து ரூபாய் தந்தேன்; வாங்க மறுத்துவிட்டார்கள். நாளைக்கு வேண்டும் என்ற பற்று துறவிக்கு இருக்கக்கூடாது என்று எழுதிக் காட்டினார்கள். யாரோ ஒருவர் கவனித்துக் கொள்ள இறைவன் கட்டளையிடுவான் என்று எழுதிக் காட்டி முறுவலித்தார்கள். வண்டியும் கிளம்பிவிட்டது: நானும் பேருந்தில் வீடு திரும்பினேன். -