பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நினைவுக் குமிழிகள்-3 விடுதிழில் (வாணப்பட்டறைத் தெருவில் உள்ளது) தனி அறை வாங்கிக்கொண்டு தங்கியிருந்தேன். ஏராளமான நூல்களைக் கட்டிக் கொண்டு போயிருந்தேன். தேர்வு நடை பெற்ற இடம் திருச்சி தேசியக் கல்லுரரி; ஆண்டார் தெருவுக்கு எதிரில் அப்போது இருந்தது. ஒன்றிரண்டு மணித்துளிகளில் தேர்வு நடைபெற்ற இடத்திற்குப் போய் விடலாம், திருச்சி மையத்தில் இரண்டு மூன்று பேர்தான் தமிழ் எம். ஏ. தேர்வு எழுதினார்கள். அவர்களுள் ஒருவர் தேசியக் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் பயிற்சி யளிப்பவராகப் (Tutor) பணியாற்றியவர். முதன்முதலாகத் தேர்வு மண்டபத்தில் பழக்கமானவர். ஒரு தேர்வு முடிந்: ததும் என் அறைக்கும் வந்தார். நான் கொண்டு வந்திருந்த, நூல் குவியலைக் கண்டு மலைத்துப் போனார், இவ்வளவு: படித்தீர்களா?’ என்றுகூடக் கேட்டுவிட்டார். தேர்வுக் குரிய பாட நூல்கள் இவ்வளவு இருக்கின்றனவே, 52 கல் வெட்டுகளில் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் 2 திங்கள் சென்று குறிப்புகள் எழுதி வைத்திருக்கின்றேன். girdiĞQarafair A Comparative Grammer of Dravidian Languages என்ற நூல் முழுமையும் படித்துக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தேன். தென்னிந்தியத் தொடக்க கால வரலாறுபற்றி அப்போது சரியான நூல்கள் இல்லை". C. S. சீநிவாசாச்சாரியின் நூல்களிலிருந்து குறிப்புகள் எழுதி வைத்திருந்தேன். இவ்வளவையும் பார்த்து நண்பர் மலைத்துப் போனார். எந்தத் தேர்வாக இருந்தாலும் அசுவமேத யாகத்திற்குத் தயாரிப்பதுபோல் தயாரித்து. விடுவேன். பாடத் திட்டத்திலுள்ள பகுதிகள் யாவும் நன்கு செரிமானம் ஆன பிறகுதான் தேர்வுகள் எழுதுவேன். இது என் பழக்கம் என்று நண்பரிடம் தெரிவித்தேன். - என் நண்பர் தான் இவ்வளவு முயன்று படிக்கவில்லை. என்பதை ஒப்புக்கொண்டார். நாள்தோறும் அவரைக் 2. 1951க்கு மேல் பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரி The Early South Indian History argård Effoa.