பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரி நூலகப் பொறுப்பு 3] மேற்கொண்டிருந்தேன். பின்னால் நான் நூல்கள் எழு தும்போது இவற்றை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. 'கற்றது கை மண் அளவு: கல்லாதது உலக அளவு என்ற பொன்மொழியின் ஒளி எனக்கு வழி காட்டிக் கொண்டே இருந்தது. 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்’’ என்ற வள்ளுவர் வாக்கையும் நினை -வுறுத்திக் கொண்டும் இருந்தது. பயிற்சிக்கல்லூரி நூலகம் தனித்தன்மை வாய்ந்ததாக அமைதல் வேண்டும். தமிழ் இலக்கியம், இலக்கணம் பற்றிய எல்லா நூல்களும் இடம் பெறுதல் வேண்டும். ஆங்கில இலக்கியத்தில் ஓரளவு இடம் பெறுதல் வேண்டும். புதுக்கல்லூரியாதலால் நூல்கள் ஒன்றுமே இல்லை. திரு மேனன் அவர்கள் நூலகத்தை விரிவுபடுத்தும் பொறுப்பை எனக்கு விட்டிருந்தார். ஆகவே தான்தோன்றித்தன மாகச் செயற்படாமல் ஒருவிதத்திட்டம் வகுத்துக்கொண்டு நூல்களை வாங்குவதற்கு முன்னர் எல்லா நூல் நிறுவனங் களினின்றும் முதலில் விலைப்பட்டியல்கள் வரவழைத்துக் கொண்டேன். ஆசிரியர், நூல் பெயர், வெளியிட்ட, கிடைக்கும் நிறுவனம், விலை எ ன் று கட்டங்கள் அமைத்து கோடிட்ட தாள்களைத் தயாரித்துக் கொண் டேன். வி ைல ப் ட ட் டி ய ல் வந்தவுடன் கணிதம், அறிவியல், வரலாறு, தத்துவம், பயிற்று முறைகள். க ல் வி , உ ள வி ய ல், கல்வி உளவியல், தமிழ் இலக்கியம், இலக்கணம், சங்க இலக்கியங்கள், காவி யங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சில முக்கிய புராணங்கள், சிற்றிலக்கியங்கள், பாரதியார் இலக்கியங் கள், பாரதிதாசன் படைத்தவை, .ே த சி க விநாயகம் பிள்ளை படைப்புகள், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை இயற்றிய நூல்கள், பல்வேறு அகராதிகள், கலைக்களஞ்சி யங்கள், அபிதான சிந்தாமணி, தொடக்கநிலை, உயர் நிலை, கல்லூரி-பல்கலைக் கழக மட்ட நிலைகளில் வெளியி 1. குறள் - 1110 (புணர்ச்சி மகிழ்தல்)