பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நினைவுக்குமிழிகள்-3 புறப் பகுதியில் முதல்வர் அறையும் அலுவலக அறையும் அமைந்தன. இவற்றைத் தவிர கீழ்ப்புறப் பகுதி முழுதும் நூலகத்திற்காக ஒதுக்கப்பெற்றது. விசாலமான இந்த இடத்தில் கல்லூரிக்கு வேண்டிய நூல்கள் அனைத்தும் வாங்கி அடுக்கலாம். கீழ்புறமும் மேற்புற அலுவலறை போல் ஒன்று இருந்தது. இதுதான் விரிவுப் பணித்துறை அமைய உதவியது. இது வந்த பிறகு ஆறு ஆண்டுகள் என் மனம் விரியும் அளவுக்கு-பணம் ஒதுக்கப் பெறும் அளவுக் கேற்ப-தரமான நூல்களின் எண்ணிக்கை பெருகியது. கலைக் கல்லூரிக்கும் பயிற்சிக் கல்லூரிக்கும் நடை முறையில் எத்தனையோ வேறுபாடுகள் உண்டு. கலைக் கல்லூரியில் மாணாக்கர்கட்குக் கற்பிப்பது, தேர்வுகட்குத் தயார் செய்வது இவற்றுடன் பொறுப்பு முடிந்துவிடு கின்றது. நல்லாசிரியர்களிடம் பயிலும் வாய்ப்புகள் இருப்பின் அவர்கள் மூலம் மாணாக்கர்களில் சிலராவது அகத்தெழுச்சி (Inspiration) பெறுவர். பயிற்சிக் கல்லூரி யின் பொறுப்பு வேறு. பட்டம் பெற்றவர்கள் ஒவ்வொரு வரையும் ஆசிரியர்களாக்குவது, குழுவாகக் கொள்கை களைக் கற்பித்த பிறகு வகுப்பறையில் கற்பிக்கும்போது மேற்கொள்ளவேண்டிய முறைகளைக் கொள்கை துணுக்கங் களுடன் பொருத்திக் காட்டி விளக்குவதுதான் முக்கியமான படியாகும். சந்தர்ப்பத்தையொட்டி, கற்பிக்க வேண்டிய பாடத்தையொட்டி , மாதிரிப் பாடங்களை அடிப்படை யாகக் கொண்டு பாடக் குறிப்புத்தயாரிக்கும் முறையைத் தனித் தனியாக ஆசிரிய மாணாக்கரைச் சந்தித்து விளக்க வேண்டும். இதற்கு வசதியாக பயிற்சிக் கல்லூரிகளில், பல்கலைக்கழக ஆசிரியர்கட்குத் தந்திருப்பதுபோல் தவித் தனி அறைகள் தரவேண்டும் என்ற இன்றியமையாமையைக் கருதிப் புதிதாகத் தொடங்கப்பெற்ற கல்லுரரியில் தனித் தனி அறைகள் ஒதுக்கப் பெற்றிருந்தன. - தவிர, நூலகத்திலுள்ள எல்லா நூல்களைப்பற்றியும் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர்கள் சிறிதளவாவது அறிந்து