பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரி நூலகப் பொறுப்பு . 3 。 கொண்டிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் பயிற்சி பெறும் ஆசிரியர்களை நூலகத்தைப் பயன்படுத்தும் முறையில் ஆற்றுப்படுத்த இயலும். சில சமயம் நூல் களையே நூலகத்திலிருந்து பயிற்சிபெறும் ஆசிரியரைக் கொண்டு குறிப்பிட்ட நூலை எடுத்துவர்ச் செய்து விளக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் எழும். இந்தத் தனி அறை எனக்குத் தனிமையாகப் பயிலவும், ஆய்வுக் குறிப்புகளைச் சேகரிக்கவும் பயன்பட்டது. கூரைக் கட்டடமாதலால் மின் விளக்குகள் வசதி செய்யப்பெற வில்லை. ஆதலால் கல்லூரியில் தங்கி பயில்வதாக இருந் தாலும் மாலை ஆறு மணிக்கு மேல் தங்கமுடிவதில்லை. இன்னொரு முக்கிய செய்தியையும் இக்குமிழியில் நினைவு கொள்ளுகின்றேன், சென்னைப் பல்கலைக்கழக விதிப்படி ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் அக்கல்லூரி ஆசிரியர்கள் இரண்டு பேரைச்சென்னைப் பல்கலைக்கழக கல்வி ஆலோசனைக்குத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இவர் களின் பதவிக் காலம் மூன்றாண்டுகளாக இருக்கும். பெரிய கல்லூரிகளில் ஆசிரியர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இத்தகைய கல்லூரிகள் சிலவற்றில் பலர் அனுப்பப் பெறு வதை விரும்புவர். இதனால் முதலாண்டுத் தேர்ந்தெடுத்து அனுப்பப் பெறுபவர்கள் இரண்டு கூட்டங்கள் முடிந்த பிறகு ஆண்டிறுதியில் தங்கள் உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்வர்; அடுத்த ஆண்டு வேறு இருவரை அக்கல்லூரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்து அனுப்புவர். சில கல்லூரிகள் இதை ஒரு மரபாகவே கொண்டிருந்தன. ஆனால், எங்கள் கல்லூரியில் இந்த மரபை மேற்கொள்ள வில்லை. மூன்றாண்டு காலத் தகுதியை நாங்கள் சிதைக்க விரும்பவில்லை. முதலாண்டு தேர்ந்தெடுக்கப் பெற்ற பே ரா சி ரி ய ர் க ள் எஸ். திருவேங்கடாச்சாரியாரும் V.N. சுப்பிரமணியமும் மூன்றாண்டுகள், அதாவது 1950-51, 1951-52, 1952-53, உறுப்பினர் பதவியை வகித்துவந்தனர். . . . - - - - M.