பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு 37 இருந்துவருகின்றது. பாண்டவர்கள் சார்பாகத் துரியோ தனன்பால் தூது சென்ற கண்ணன் அத்தினபுரத்திற்கு வந்தபோது விதுரன், துரோணன், வீடுமன் முதலி யோர் இரண்டு யோசனை தூரம் எதிர் சென்று கண்ணனை வரவேற்றனர். கண்ணன் அத்தினபுரம் புகுந்த பின் துரியோதனன் இல் புகாமல் விதுரன்வாழ் வளமனை புகுந்தான்’ ’’. அமார்க்கு அமிழ்தம் அருளிய மாயோன் விருந்தாகத் தம் குடிலுக்கு எழுந்தருளினமை கண்டு உளம் உருகுகின்றான் விதுரன். கண்ணனை நோக்கிக் கூறுகின் றான : முன்ன மேதுயின் றருளிய முதுபயோ ததியோ ? பன்ன காதிபப் பாயலோ ? பச்சைஆல் இலையோ? சொன்ன நால்வகைச் சுருதியோ ? கருதிநீ எய்தற்கு என்ன மாதவம் செய்தது.இச் சிறுகுடில்?’ என்றான்." (பயோததி - பாற்கடல்: பன்னகம் - பாம்பு: சுருதி - மறை: குடில் - குடிசை! இந்த பாடல் வைணவ சம்பிரதாயத்தின் உயிர்நாடியாக அமைந்து விடுகின்றது, இதை மனத்தில் கொண்டே வைணவர் ஒருவர் அடியேன் குடிசைக்கு ஒரு நாள் எழுந் தருள வேண்டும் என்று மற்றொருவரை வேண்டும்போது அவர் தேவரீர் திருமாளிகைக்கு சமயம் வாய்க்கும்போது வருவேன்' என்று கூறிக் கொள்வதை இன்றும் நாம் வைணவ சம்பிரதாயமாக வழங்கி வருவதைக் காணலாம். பெரிய பெரிய மாளிகைகளுக்கும் இக்காலத்தில் குடிச்ை' என்று பெயர் சூட்டும் வழக்கமும் இருந்து வருகின்றது, 2. கிருட், துர்து - 73 , . 3. டிெ. 78.