பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹密 நினைவுக்குமிழிகள்-3 Ličić, gospáñésafayth School of Tamil Studies Gréârgy பெயரிட்டு வழங்குவதையும் ஈண்டு நினைவு கூரலாம். இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டால் கீற்றுக் கொட்டகைக் கல்லூரி' என்ற ஏளனப் பேச்சுக்குப் பொருள் இல்லாது போகும். முதலாண்டுக்குள் மாணவர்க்கு 300 சிறு மேசைகள், கையில்லாத 300 நாற்காலிகள், கண்ணாடி முகப்புள்ள பல பீரோக்கள், முதல்வர் அறைக்கு வேண்டிய பெரிய மேசை, பல கையுள்ள நாற்காலிகள், ஆசிரியர்கட்கு வேண் டிய 20 மேசைகள், 20 கையுள்ள நாற்காலிகள் - இவை அசுர வேகத்தில் தயாராகி முடிந்தன. எங்களுக்கு மயன் படைப்பு தான் நினைவுக்கு வந்தது. எல்லாம் தேக்கு மரத்தாலானவை. வரையாது வழங்கும் வள்ளலின் பொருளுதவியும், திறமை மிக்க தச்சுத் தொழிலாளர்களின் இடைவிடாத உழைப்பும் இவை தயாரானமைக்கு முதற். காரணமாக அமைந்தன. அரசுகூட இவ்வளவு விரைவாகச் செயற்பட முடியாது. அங்குக் கோப்புகள் ஆமை வேகத் திற்குக் குறைவாக நகரும்; இங்குக் கோப்புகள் முயல் வேகத்திற்கும் அதிகமாக நகர்ந்தன. அது இல்லை, இது இல்லை என்ற குறையையே நாங்கள் எப்பொழுதும் உணரவில்லை. ஆசிரியர்கள் பற்றாக் குறையை நிறைவு செய்ய வள்ளல் முன் வந்தமை தமிழகத்தின் தவப்பய னாகும். ஆசிரியர்கள் பற்றாக் குறையை நிறைவு செய்ய வேண்டிய பொறுப்பை, அரசின் விருப்பத்திற்கிணங்க, வள்ளல் மேற்கொண்டு நிறைவேற்றினமையும் தமிழர் களின் தவப்பயனாகும், இப் பொறுப்பை அரசு மேற் கொண்டிருந்தாலும் இவ்வளவு விரைவாக, இவ்வளவு சிறப்பாக இவ்வளவு திறமையாகக் கல்லூரியை உருவாக்கிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வெளிக் கொணர்ந்திருக்க முடியாது. இங்கு (காரைக்குடியில்) ஒரு பயிற்சிக் கல்லூரி நிறுவு வதற்குச் சென்னைப் பல்கலைக் கழகம், ஆணையம்