பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு 39 (Commission) ஒன்றை ஏற்படுத்தியது. அதன் தலைவர் ஏ. என். தம்பி என்பவர் பரிந்துரைத்த அறிக்கையில் பல நல்ல அம்சங்கள் இருந்தன: கல்லூரி நல்ல அடிப்படையில் அமை வதற்கு இவை துணை செய்தன. எல்லாம் நன்கு அமையி னும் பேராசிரியர்கள் நன்கு தேர்வு செய்து நியமிக்கப் பெறாவிடில் கல்லுரரி நன் முறையில் அமையாது. கல்விக் கொள்கைகள், கற்பிக்கும் முறைகள், கல்வி உளவியல், தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக இயல், உடற்பயிற்சி, கைத்தொழில் - ஒவியம் - இவை ஒவ்வொன்றிற்கும் ஒவ் வொருவர் நியமிக்கப் பெற வேண்டும் என்றும், இவர்களில் இருவர் பேராசிரியர் ஊதியத்தில் இருக்க வேண்டும்என்றும் நிபந்தனைகளை விதித்திருந்தது ஆணையம்.கட்டடங்கள், வகுப்பறைகள், நூலகம், ஆசிரியர்க்குத் தனித்தனி அறை கள் போன்ற குறிப்புகள் அறிக்கையில் அடங்கியிருந்தன. இவற்றையெல்லாம் மிக விரைவில் நிர்வாகம் நிறைவேற். றின. இந்நிலையில் துறையூர்ப் பள்ளி நிர்வாகம், இங்குக் கல்லுரரி நிர்வாகம் இவற்றின் தாரதம்மியங்களை ஒப்பிட்டு நோக்கினேன் ; மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு கள் பளிச்சிட்டன. ஏ. என் தம்பியும், ஐ. என். மேனனும் ஒரே சமயத்தில் நியமனம் பெற்றனர். ஏ. என். தம்பி பயிற்சிக் கல்லூரிக் கும் ஐ. என். மேனன் கலைக்கல்லூரிக்குமாகப் பொறுப் பேற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று இப்போது என் மனம் எண்ணுகின்றது. காரணம், ஏ. என். தம்பி கல்வியியல் கல்லூரியில் பணியாற்றிய அநுபவம் உள்ளவர்; ஐ.என். மேனன் கலைக்கல்லூரியில் பணியாற்றிய அநுபவம் மிக்கவர். அப்படி ஏற்பாடு இருந்தாலும் தம்பி பயிற்சிக் கல்லூரிக்கு வர விரும்பியிருக்க மாட்டார், மேனன் எதில் இருப்பினும் சரி என்று ஒப்புக் கொண்டிருப்பார். கலைக் கல்லூரியில் மாணவர் கூட்டமும் அதிகம்; ஆசிரியர் கூட்ட மும் அதிகம்; பணப்புழக்கமும் அதிகம். பல்வேறு விதமாகக் செலவு செய்துபகட்டான விழாக்களை அமைக்கலாம். ஜம்ப