பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( நினைவுக் குமிழிகள்-3 மாகவும் இருக்கமுடியும், இராஜசக் குணம் மிக்க தம்பிக்கு இது பொருத்தமாக அமைந்தது. மேனன் அமைதியான போக்குடையவர்; சத்துவ குணம் மிக்கவர். இருவரும் கேரளத்தைச் சார்ந்தவர்களாதலின் இவர்கள் காரைக் குடிக்கு வரும் முன்பே மனம் பொருத்தம் இல்லாதவர்கள் என்பது கூர்ந்து நோக்குபவர்கட்குத் தெரியாமற்போகாது. ஏதோ இருவரும் ஒரளவு பேசிக் கொண்டார்களாயினும் நேதுங்கிப் பழகவில்லை என்பதை எல்லோரும் அறிவர்,

  • *

கீசியும் பாம்பும் போன்று ஒற்றுமையுடையவர் என்பதைச் சாதாரண மக்களும் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. நிர்வாகக் குழு உறுப்பினர்களில் சா. கணேசன் முக்கிய மாணவராகத் திகழ்த்தார். ஆனால் நிர்வாகத்தில் தலை யிடுவதில்லையானாலும் அழகப்பா கல்லூரி கல்வி நிகழ்ச்சி கள் அனைத்திலும் உள்துழைந்து கலந்து கொள்வார். மாணாக்கர்கள்மீது அளவற்ற அன்பு காட்டி வந்தார். மாணவர்களின் படிப்பு முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டிருந்தாலும் படிப்பைவிட அவர்களிடையே ஒழுக் கம், பண்பாடு இவற்றைப் படிய வைத்து வளர்ப்பதில் பேருக்கம் காட்டிவந்தார். எல்லா ஆசிரியர்களிடம் அள வற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தாலும் தமிழாசிரியர் களிடம் அதிக மதிப்பும் மரியாதையையும் வைத்திருந்தார். இவருடைய கற்பக நிலையத்தில் இல்லத்தின் பெயர்) பல துறை ஆசிரியர்களில் சிலரும் தமிழாசிரியர்கள் பலரும் அடிக்கடி வந்து போவதைக் காணலாம். ஆட்சிக்குழு உறுப்பினர் என்பதற்காக இவர்கள் வரவில்லை என்பதை யும் இவருடைய பல துறை ஆர்வமும், தேசபக்தியும், நேர்மையும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசாத வெள்ளை மனமும், பொதுமக்களுக்கு இயன்ற வரை உதவும் தாராள மனப்பான்மையும் அனைவரையும் இவர்பால் ஈர்த்தன என்பது என் கணிப்பு. சா. கணேசனிடம் மேல்விழுந்து பழுகுபவர் திரு ஏ. என். தம்பி, அதிகமாகவே பழகினார் என்பதை