பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 42 நினைவுக் குமிழிகள்-3 பணி இல்லாதபோது வீடு திரும்புவார்’ என்று. சொல்லுவேன். அது சரி, வேலை செவ்வனே நடந்தால் சரி. ஒவ்வொருவருடைய பழக்கம் ஒவ்வொரு மாதிரி இருக்கும்’ என்று சொல்லி வாளா இருந்து விடுவார். ஒரு நாளும் சா. கணேசனுக்கு மேனன்மேல் வெறுப்பு இருந்த தில்லை என்பது மட்டிலும் தெளிவு. சோமலெ : திரு சோம. லெட்சுமணன் செட்டியார் என்பவர் செட்டி நாட்டிலும் பிற இடங்களிலும் புகழ், பெற்றவர். உலகம் சுற்றிய தமிழர்; இரண்டாவது தமிழர். இதற்கு முன்னர் ஏ. கே. செட்டியார் உலகத்தைச் சுற்றி உலகம் சுற்றிய தமிழன்’ என்ற நூலும் எழுதிப் பெரும் புகழ் பெற்றவர். இவர் வெளியிட்டு வந்த குமரி மலராலும் அறிஞர் உலகத்திற்கு அறிமுகமானவர். திரு சோமலெயும் தமது பல வெளியீடுகளால் தமிழறிஞ. ருக்கு நன்கு அறிமுகமானவர். 1951-செப்டம்பர் என நினைக்கின்றேன்; ஒருநாள் பிற்பகல் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதற்காக கல்லூரிக்கு வந்தார். நான் சோமலெயை ஒளிப்படத்திலும் பார்த்ததில்லை. காரைக் குடியில் பலர் அவரைப் பற்றி என்னிடம் சொன்னார்கள். அப்போது குன்றக்குடியிலிருந்த சாமி. பழநியப்பன் இவரைப் பற்றி நன்கு சொல்லியிருந்தார். ஆகவே, நானும் அவரைப் பார்ப்பதற்காகத் துடித்துக் கொண்டிருந்தேன். நெற்குப்பை அவரது சொந்த ஊர் என்பதை அறிந்: திருந்தும், அங்குப் போக நினைக்கவில்லை. தேடிச் செல்ல வேண்டிய மருந்து காலில் அகப்பெற்றதுபோல அந்த நண்பரே கல்லூரிக்கு வந்துவிட்டது எனது பேறு என்றே கருதினேன். வந்தவர் தன்னை யார் என்று சொல்லாம லேயே பேசிக் கொண்டிருந்தார். தன்னை அறிந்து கொண் டிருக்கவேண்டும் என்று சொல்லாது விட்டார் போலும். மிக எளிமையான தோற்றத்துடன் இருந்தமையாலும், நான் அவரைப் பற்றிய கற்பனையில் கொண்டிருந்த உருவம் வேறாக இருந்தமையாலும் உடனே புரிந்து