பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு 委岛” கொள்ள முடியவில்லை. பிறகு-அரைமணிக்குள்-இவரை எப்படியோ அறிந்துகொண்டேன். பிறகு அன்பு கிளர்ந் தெழ மேலும் அரைமணி அளவளாவினோம். கல்லூரியில் ஒரு பானம்கூட வழங்கமுடியவில்லையே என வருந்தினேன். இல்ல முகவரியைத் தந்து ஒருநாள் ஞாயிறு அன்று இல்லத் திற்கு எழுந்தருளுமாறு வேண்டினேன். அவரும் என் வேண்டுகோளுக்கிணங்க என் வீடு தேடி வந்துவிட்டார். ஒரு சிறிய விருந்து அளித்தேன்; உண்டு மகிழ்ந்து அளவளாவிச் சென்றார். அன்று முதல் அவர் திருநாடு" அலங்கரிக்கும் வரை (1986) மிகவும் நெருங்கிய நண்பர் களாகப் பழகி வந்தோம். திருப்பதியில் உமாமகேஸ்வர ரெட்டி குடியிருப்பில் நான் வாழ்ந்த பொழுது அவரும் ஆச்சியும் அவர் தம் அருமை மகனுக்கு முடியிறக்கத் திருப்பதி வந்தவர்கள் இரண்டு நாட்கள் என் விருந்தினர் களாகத் தங்கினார்கள். என்ன மாதவம் செய்ததோ இச்சிறுகுடில்?’ என்ற விதுரனின் உணர்வு பெற்று மகிழ்ந்தேன். குமிழி-1 13 6. என் எதுமலைப் பயணம் விதுமலை என்னும் சிற்றுர் காவிரியின் வடபால் திருச்சியிலிருந்து இருபது கல் தொலைவிலுள்ளது. இந்த ஊரில் காமாட்சியம்மன்-கறுப்பண்ண சுவாமி-தங்கை அண்ணன் முறையில் -எழுந்தருளியுள்ளனர். இப்போது திருச்சியிலிருந்து பேருந்து வசதி உண்டு. 1952-இல் இந்த வசதி இல்லை. எங்கள் குடும்பத்தில் முதல் மகனுக்கு இத்திருக்கோயிலில் முடி இறக்கும் வழக்கம் வழி வழியாக வந்து கொண்டுள்ளது. இந்த வழக்கத்தையொட்டி என் மூத்த மகன் இராமலிங்கத்திற்கு 1952-பிப்பிரவரியில்