பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. நினைவுக்குமிழிகள்-3 (சிவன்ராத்திரியன்று) முடி இறக்க முடிவு செய்தோம். என் அன்னையார் அப்போது காரைக்குடி வரவில்லை; கோட்டாத்துாரிலேயே இருந்தார்கள். நாங்கள்-நான், என் மனைவி, செல்வன் இராமலிங்கம் -முதல் நாள் கோட்டாத்துார் வந்து சேர்ந்தோம், கோட்டாத்துரசில் அரும்பாவூர் குணம் நல்லப்பு ரெட்டியார் அவர்கள் உதவியால் மாட்டு வண்டியில் என் அன்னையாருடன் மாலை எதுமலை வந்தடைந்தோம். கோயில் ஊருக்குக் கிழக்கே சுமார் 3 கல் தொலைவில் உள்ளது; இரவு உணவு கொண்டு வந்திருந்தமையால் நேராகக் கோவிலை வந்தடைந்தோம்-இரவு ஏழு மணிக்கு. அக்காலத்தில் கோயிலுக்கு அடைப்பே இல்லை. பகல் நேரங்களில் ஆடுமாடுகள் வந்தடையும் இடமாகத் திகழ்ந்தது. ஆண்டிற்கு இருமுறை (ஆடி மாசி) இம் மாதங்களில் இரு நாட்களில் துப்புரவு செய்யப் பெற்று, விழாக்களும் பூசையும் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் வந்து காமாட்சியம்மன் - கறுப்பண்ண சுவாமியை வழிபட்டு அவர்களின் கருணைக்குப் பாத்திரர் களாவர். நாங்கன் வந்த அன்று வரகூர், பெரகம்பி முதலான இடங்களிலிருந்து ரெட்டி குலப் பெருமக்கள் வந்திருந்தனர். பெரகம்பியிலிருந்து என் தாய் மாமன் (அம்மான்) வந்திருந்தார். இவர் வாழ்நாள் வரை இடையில் விட்ட உறவு தொடர்ந்தது; எதிர்காலத்தில் என்னாமோ? யார் அறிவார்கள்? பெரகம்பியிலிருந்து என்னுடன் திண்ணைப் பள்ளியில் படித்த ஒரிரு இளைஞர்களும் வந்திருந்தனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பூனையார் வீட்டுத் தம்பு சிதம்பரம் என்பவர். இவர்எதுமலையில் உள்ள சொ. சிதம்பர அய்யரின் முன்னோர் சொக்கவிங்கப்யரால் எளிமையான முறையில் அனைவரும் பொருளுணருமாறு சந்தப் பாடல்கள் கலந்து பாடப் பெற்ற (கைப்படியில்