பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் எது மலைப் பயணம் 龛每、 உள்ளது) காத்தவராய சுவாமியின் கதையை இசையுடன் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். சிவன்ராத்திரியில் துரங்காமலிருக்க இவர் பாட்டு துணை செய்தது. இந்த ஆண்டு இவர் பாடியதைக் கேட்டு மகிழ்ந்தேன். அதிகாலையில் வண்டியைப் பூட்டிக் கொண்டு கோயிலிலிருந்து எதுமலைக்கு வந்தோம். பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள என் நண்பர் பெத்துசாமி வீட்டில் காலை சிற்றுண்டி, காஃபியை முடித்துக் கொண்டு கோட்டாத்துார் வந்தோம். பகலுணவை முடித்துக் கொண்டு துறையூருக்குப் பேருந்தில் வந்தோம். அன்று என்ன காரணமோ, திருச்சிக்குச் செல்லப் பேருந்தில் இடம் கிடைக்கவில்லை. எப்படியோ இடம் கிடைத்து திருச்சிக்கு 4 மணிக்கு வந்து சேர்ந்தோம்; இருப்பூர்தி ஏறி இரவு 8-30 மணி சுமாருக்குக் காரைக்குடி வந்து சேர்ந்தோம். என் அன்னையார் கோட்டாத்துரிலேயே தங்கி விட்டார்கள்; மகனுடன் வந்து சேர்ந்து வாழும் பேறு இன்னும் பெறவில்லை. அடுத்த ஆண்டு (1953) தன் பேரில் இருந்த நிலத்தை 3; ஆயிரத்திற்கு விற்று விட்டுக் காரைக்குடி வந்து விட்டார்கள். 1979-சிவன்ராத்திரியன்று என் முதல் மகன் இராமலிங்கத்தின் முதல் மகள் மிருனாளினிக்கு முடி இறக்கச் சென்ற போதும் 1981-சிவன்ராத்திரியன்று என் இளைய மகன் டாக்டர் இராமகிருட்டிணன் மகன் வேங்கடேசனுக்கு முடி இறக்கச் சென்றபோதும் வழக்க மாக வரும் சிதம்பரம் வரவில்லை. விசாரித்ததில் பச்சை வாதத்தால் தாக்குண்டு கிழக்கே ஏதோ ஒர் ஊரில் (ஊர் பெயர்நினைவு இல்லை) தன் மகள் வீட்டில் வதிகின்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். பேத்திக்கு முடி இறக்கும்போது திருச்சியில் ஆனந்தா காப்பரேஷன் கருப்பையாபிள்ளை வீட்டில் குளியல்,