பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் எது மலைப் பயணம் 47° சிற்றுண்டியை முடித்துக் கொண்டு மலைக் கோட்டை பார்க்கச் சென்றோம். என் பேத்தி சிரமமில்லாமல் மலை ஏறி விட்டாள்; உச்சிப் பிள்ளையார் கோயிலையும் உதவி யின்றி ஏறிப் பார்த்துவிட்டாள். தாயுமானவர் கோயில் திருச்சுற்றிலுள்ள எல்லா தேவதைகளையும் தொட்டுத் தொட்டு வணங்கினது இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது. அன்றிரவே, சிற்றுண்டியை முடித்துக் கொண்டு மலைக்கோட்டை விரைவு வண்டியில் ஏறிச் சென்னையை அடைந்து விட்டோம். 1982 இல் என் பேரன் வேங்கடேசனுக்கு (என் இரண்டாம் மகன் டாக்டர் இராமகிருட்டிணனின் முதல் மகன்) முடி இறக்கும்போது என் சம்பந்தி துரைசாமி ரெட்டியார் தன் மனைவியுடன் வந்திருந்தார். திருச்சி யிலிருந்து கார் ஏற்பாடு செய்து கொண்டு சென்றிருந் தோம். முன் மாதிரியே தியாகராச ரெட்டியார் வீட்டில் சிறிது நேரம் தங்கித் திருக்கோயிலை அடைந்தோம். பூசை விடியற்காலை 4 மணிக்கு முடிந்தது. கார் அனுப்பிக் குழந்தைக்குப் பால், எங்கட்குக் காஃபி தியாகராச ரெட்டியாரிடமிருந்து தருவித்துக் கொண்டோம். கோயி விலிருந்து 6 மணிக்குக் கிளம்பி தியாகராச ரெட்டியாரிடம் விடைபெற்றுக் கொண்டு திருச்சி வந்தடைந்தோம். ஆனந்தாஸ் கார்ப்பரேஷன் கடையில் மேல்மாடியிலுள்ள அறையில் தங்கி, குளியல், சிற்றுண்டியை முடித்துக் கொண்டு திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு வந்தோம். காலை 10 மணி வண்டிக்குப் பயனச் சீட்டுகள் கிடைத்தன. மாலை ஐந்து மணிக்குச் சென்னை வந்தடைந்தோம் எதுமலையான் துணையிருந்தால் ஏதுமிலானும் எதற்கும்மலையான் என்ற ஆன்றோர் வாக்கு இன்னும் என் மனத்தில்