பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொ. முருகப்பர் - 51 இணைந்து ஆற்றிய சமூகத் தொண்டு தமிழ்ப் பெரு மக்களுக்குக் கிடைத்தது. இவர் சமயத் தொண்டிலும் இறங்கி அக்கமணியும் தெய்வத் திருநீறும் தரித்து ஆற்றிய சொற்பொழிவுகள் பல. காரைக்குடியில் பலர் இதை எனக்குச் சொல்லிய துண்டு. இவரது நட்பு எனக்கு ஏற்பட்ட பிறகு தம் சமயப்பணியை எனக்குச் சொன்னார். ஒரு நாள் நான் அமராவதிப் புதுரர் மகளிர் இல்லத்தில் (1952) பல விஷயங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று என்னை நோக்கி, ரெட்டியார் வாள்! சுயமரியாதைக்காரனான என்னை என்ன வென்று நினைக்கின்றீர்கள்? நெற்றியில் ஒன்றும் அணிய வில்லை என்பதால் கடவுள் நம்பிக்கை அற்றவன் என்று கருதுகின்றீர்களா? (என் நெற்றியிலிருந்த திருநீற்றுக் காப்பும் குங்குமப் பொட்டும் இவ்வாறு பேசத் தூண்டி யிருக்க வேண்டும்) . எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. நான் நாளொன்றுக்கு அணிந்த திருநீற்றின் எடை ஐந்து பலம் இருக்கும். கழுத்தில் நிரந்தரமாக ஓர் அக்கமணி திகழும். சிறப்பான நிகழ்ச்சியின் போது முக்கால் கிலோ எடை அக்கமணி மாலை தலையிலும் கழுத்திலும் பொலி யும். திருவாசகம், தேவாரம், பெரியபுராணம் இவைபற்றி எண்ணற்ற பேச்சுகள் நிகழ்த்தியிருக்கின்றேன். அவை இப்போது இ பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்ல மெல்லப் போயின. 'ஆஷாடபூதிகள் நிறைந்த இவ் வுலகில் இவை பயன்படா என்று நினைத்து இவற்றைக் கைவிட்டேன். வைதிகப் போர்வை பயன்படாது என்று கருதி, அதனைத் துறந்து எந்தப் போர்வையுமின்றி நேர்மையாகப் பணியாற்றி வந்தேன். இப்போது எல்லாவற்றையுமே துறந்து தமிழ்ப் பணியிலும் இறங்கி விட்டேன்......... என்று வேகமாகப் பேசி என்னை உணர்ச்சி வ ச ப் படுத் தி விட்டார். இப்போது