பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ சா. முருகப்பர் 53 பூஞ்சோலைகளும் இருந்த இடங்களில் கள்ளியும் கற்றாழை யும் முளைத்துக் கிடக்கின்றன. இடை இடையே எத்தனையோ அழகாகக் கனி மரங்களும் பூஞ்செடிகளும், மேடைகளும், ஓடைகளும் இன்பம் சொரிந்து கொண்டிருப் பதையும் காண முடிகின்றது. இவற்றைப் புலவர்கள் கண்டு மகிழ்கின்றனர். அதுபவித்துக் களிக்கின்றன்ர். அங்கே வளர்ந்து நிற்கும் முட்செடிகளும் மரங்களும், புதர் களும் வெட்டி சாய்க்கத்தக்கவை என்பதைத் தெரிந்தும் மனம் வராது தவிக்கின்றனர்; துணிவு பெறாது திண்டாடு கின்றனர்; ஆயினும்இதன் முடிவு? இந்த நூல் இப்படியே மக்கள் நெருங்க முடியாத காடாக இருக்க வேண்டியது தானா? அல்லது அவற்றை வெட்டி எறிந்து, மக்கள் யாவரும் எளிதாக உள்ளே சென்று கம்பன் கவிதை மலர் களை மணக்கும்படிச் செய்ய வழி வகுப்பதா? இதைப் புலவர் பெருமக்களும் சுவைஞர்களும், பெருமக்களும் ஊன்றிச் சிந்திக்கவேண்டும்' என்று கூறி நம்மையெல்லாம் யோசிக்கச் செய்கின்றார். ராய. சொ. அவ்ர்கள் தலைமையில் கூடிய புலவர் குழுவும் இதனைச் சிந்தித்துச் சீர்த்திருத்தப் பணியின் இன்றியமையாமையை ஒப்புக் கொண்டது. வாரந் தோறும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கூடக் காவியத்தில் கவிதைகளுடன் கலந்துள்ள வெள்ளிப்பாடல் களை இனம் கண்டு நீக்கவேண்டும் என்று முடிவுசெய்தது. இயன்றவரைக் கிளைக் கதைகள் பற்றிய செய்திகளைக் குறைத்துக்கொண்டு காவிய நடை குன்றாதவாறு காவிய மாந்தர்களின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அறிந்து கொள் வதற்கு ஏற்பக் காவியத்தைச் சுருக்கிக் காட்ட வேண்டும் என்றும் முடிவு செய்தது. அடியிற்கண்ட நியமங்களை நினைவிற்கொண்டு பணி தொடங்க வேண்டும் எனக் கருதியது. - - - (1) கதை தொடர்புற அமைதல்