பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நினைவுக் குமிழிகள்-3 வந்திருப்பதாக நண்பர் ஒருவர் கூறினார். அத்தொகுதியை நான் பார்க்கவில்லை, நானும் வேறு பணியில் ஆழ்ந்து போனதால் இதையெல்லாம் கவனிக்க முடியவில்லை. இந்நிலையில் திருப்பதி போன பிறகு என் பணியின் திசையே மாறியது. சிந்தனையும் வேறு திசையில் திரும்பி விட்டது. குமிழி-1 ! 5. 8. சொ. முரு : இராம காதை ஒரு சனிக்கிழமையன்று ராய. சொ. அவர்கள் தலைமையில் புலவர் குழு கூடியது. இதில் அடியேன், திரு, க. தேசிகன் (அழகப்பா கல்லூரித் தமிழாசிரியர்), திரு பூ, அமிர்தலிங்கம் (காரைக்குடி நகராண்மைக் கழக உயர் நிலைப் பள்ளித் தமிழாசிரியர்) கூடியிருந்தோம். சொ. முருகப்பாதான் பிரச்சினைகளை எழுப்புவார். வாதங்கள், எதிர்வாதங்கள் எல்லாம் நடைபெறும். ஏற்றுக்கொள்ளத் தக்க முடிவு உருவாகும். ராய. சொ. பச்சைக் கொடி காட்டுவார். முருகப்பாவும் அதை ஏற்றுக் கொள்வார். எல்லோரும் ஒருமனதாக அதை ஒப்புக் கொள்வோம். இக் கூட்டத்தில் கம்பன் காவியத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்று ஆராய்ச்சி நடைபெற்றது. பலர் பலவாறாகக் கூறினர். முருகப்பா தமது கருத்தை நிரல் பட அமைத்துப் பின்வருமாறு கூறினார். (1) கம்பராமாயணம்’ என்று வழக்கிலுள்ள பெயர் நூலுக்குக் கம்பரால் இடப் பெற்றதன்று. இந்நூலிலுள்ள சொற்கள் தமிழ் மரபு கெடாமல் ஆளப் பெற்றிருப் பதைக் காண முடிகின்றது. இராமன், இலக்குவன்,