பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொ. முரு: இராம காதை 59. இராவணன் என்ற சொற்களைக் காண்க. வடமொழிச் சொற்கள் யாவும் தமிழ் மரபிற்கு ஏற்பவே அமைந் துள்ளன. எனவே கம்பன் + ராமாயணம் - கம்பனி ராமாயணம் என்று அல்லது கம்பவிராமாயணம் என்று வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும். அப் டி வழங்கப் பெறாமையால் கம்பர் இந்நூலுக்குக் கம்பராமாயணம் என்று பெயர் வைக்கவில்லை என்பது தெளிவு. அப்படி அவர் இதற்கு இராமாயணம்' என்று பெயர் வைக்கக் கருதினாலும் தன் பெயரை அதற்கு முன்னால் சேர்த் திருக்க மாட்டார். மேலும் அகச்சான்றாக ராமாயணம்’ என்ற சொல் நூலிலும் இல்லை. பாயிரச் செய்யுட்களிலும் காணப் பெறவில்லை. (2) வான்மீகி முனிவர் தான் எழுதிய இராம காதைக்கு 'ராமாயணம்' என்று பெயரிட்டார். அந்த நூலின் கதைப் போக்கு, அதன் தத்துவம், கவிதை முதலிய வற்றை அநுபவித்த மற்றைய மொழிக் கவிஞர்கள் அதில் ஈடுபட்டு வியப்பெய்தினர். அதன் புகழை உணர்ந்து தங்கள் மொழியிலும் அப்படிப்பட்ட காவியம் ஏற்பட வேண்டும் என்று அவாவுற்றனர். இப்படி இராம காதையைப் பாடின புலவர்கள் பலர். இக்கதைக்கு பாஸ்கரகவி பிரதிமாகாடம் என்று பெயர் சூட்டினார். கம்பர் பெருமான் இராமகாதை’ என்று பெயரிட்டார். துளசிதாசர் ராமசரித்திரமானஸ்' (இராமனின் சரித்திர மான தடாகம்) என்று பெயர் வைத்தார். என்ற போதிலும் இராம கதையை முழுதும் சொல்லும் பெரு வழக்குள்ள நூல்களையெல்லாம் இராமாயணம் என்றே தமிழ் மக்கள் வழங்கினர். இதுதான் எளிதாக விளங்கு வதாக இருந்தது. ராமாயணம்’ என்றால் அது வான்மீகி முனிவர் இயற்றின காவியம்தான். வேறு பலரும் "ராமாயணம் என்று தமது நூலுக்குப் பெயர் சூட்ட வில்லை. பொது மக்கள் வழக்கில் ராமாயணம் என்றால் இராமனுடைய கதையைச் சொல்வது என்ற கருத்து