பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

台莎 நினைவுக் குமிழிகள்-3 அழுத்தமாகப் பதிந்து விட்டபடியால், எல்லாவற்றையுமே இராமாயணம் என்று வழங்கினர். ராமாயணம்' என்ற சொல்லுக்கு முன்னால் பாடினவர் பெயரையும் ஒட்டி விட்டனர். இந்த நியதியில் தான் வான்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்தையும் வான்மீகி ராமாயணம்' என்று கூற வேண்டியதாகி விட்டது. எனவே, ராமாயணம் என்றாலே வான்மீகி முனிவரால் செய்யப் பெற்ற நூலின் பெயராகக் கொள்ள வேண்டியிருக்க, அப் படிக் கொள்ளாமல் அதையும் வான்மீகி ராமாயணம்’ என்று குறித்துக் காட்ட வேண்டிய நிலைமையைத் தமிழ் நாட்டில் கம்பருடைய காவியம் செய்து விட்டது என்பது துணித்து உணர வேண்டிய தொன்றாகும். இனி இந்த நூலுக்கு இராமகாதை" என்ற பெயரே பொருத்தமுடைய தாகும், சாற்றுகவிகள் இப்பெயரையே குறிப்பிடுகின்றன. {3} இன்னொரு கருத்தும் ஈண்டு சிந்திக்க வேண்டிய தொன்று. நடையில் நின்றுயிர் நாயகன் தோற்றத்தின் இடைநி கழ்ந்த இராமாவ தாரப் பேர்த் தொடைநி ரம்பிய தோம் அறு மாக்கதை சடையன் வெண்ணெய்நல் ஊர்வயிற் தந்ததே -தற்சிறப்பு-11 இதில் இராமாவதாரப் பேர்’ என்று இருப்பதைக் கொண்டு கம்பர் இந்நூலுக்கு இராமாவதாரம்’ என்று பெயர் வைத்திருக்கலாம் எனக் கருதப்பெறுகின்றது (வை. மு. கோ.). திருவவதாரப் படலம்’ என்று யாரோ ஒருவர் பாட, அதற்கேற்பச் சாற்று கவியாக இப்பாடல் இருக்கக்கூடும்.இராமாவதாரம்என்ற பெயர்அந்நூலுக்குப் பொருத்தமாகலாம். கம்பர் இராமாவதாரம் பாடினார் என்று ஒன்றும் இல்லை. யாரோ பாடிய இராமாவதாரம்’ என்ற நூலைத் திருவவதாரப் படலம் என்று திருத்தி இதில் செருகியுள்ளனர்' என்று கருதுவர் முருகப்பனார். மேலும் அவர் இராம’ என்ற வடமொழிப் பெயரைத்