பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ சா. முரு: இராமகாதை 6 í தமிழ் மரபுக்கு இணக்கித் தம்முடைய நூல் முழுவதும் ஆண்டிருப்பதைக் காண்கின்றோம். இராமன் என்னும் செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்' என்பது குறிப்பிடத்தக்க சான்றாகும். இராமன் + அவதாரம் = இராமாவதாரம் என்று வடமொழிச் சந்தித் தொடராகி அதுவும் நூற். பெயராவது சிறிதும் பொருந்தாததாகும்’ என்று வற்புறுத்துவர். இன்னும் அவர் கருதுவது நடையில் நின்றுயர் என்ற பாடலில் இராமாவதாரத்தைக் கம்பர் பாடினார் என்று கூறப் பெறவில்லை. அந்தப் பாடலைக் கம்பரே தற். சிறப்புப் பாயிரமாகப் பாடினார் என்று கூறுகின்றனர். அதே பாயிரத்தில் மற்ற கவிகளில், நொய்தின் நொய்யசொல் நூற்கலுற்றேன் (5) வையம் என்னை இகழவும் மாக எனக்கு எய்தவும் இது இயம்புவது (8) இறையும் ஞானம் இலாதஎன் புன்கவி (9) என்று தன் கவியைப்பற்றிக் கூறிக் கொண்ட கம்பர் பெருமான் இக்கவியில் மட்டும், தொடை நிரம்பிய தோமறு மாக்கதை' என்று தன்னுடைய நூலைத் தானே ஏற்றிப் புகழ்ந்து கூறிக் கொண்டிருப்பாரா? என்பது சொ. முரு. அவர்கள் விடுக்கும் வினா. இது நம்மைத் திகைக்க வைக்கின்றது. இம்பர் நாட்டிற் செல்வம்எலாம் எய்தி அரசாண்டு இருந்தாலும் உம்பர் நாட்டில் கற்பகக்கா ஓங்கு நீழல் இருந்தாலும் 1. கிட்கிந்தை-வாலி வீடுற்ற படலம்-71