பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொ. முரு: இராமகாதை 63 என்ற இந்த மூன்று பாடல்களிலும் இராமன் திருக்கதை,” 'இராமகாதை" என்று கம்பராமாயணப் பதிப்புகளில் குறிப்பிடப் பெற்றிருப்பதையும், நூலினுள் கம்பரால் அவையடக்கமாகப் பாடப் பெற்ற . ஓசை பெற்(று) உயர் பாற்கட லுற்(று)ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசை பற்றி அரையல் உற்றேன்.இது ஏசில் கொற்றத்(து) இராமன் கதையரோ t -தற்சிறப்பு-4 என்ற பாடலிலும் இராமன் காதை" என்று குறிப்பிடப் பெற்றிருப்பதையும் எடுத்துக் காட்டிக் கம்பர் தன் காவியத்திற்கு இராமகாதை" என்றே பெயர் சூட்டி யிருக்க வேண்டும் என்று தம் கருத்திற்கு அரண் அமைத்துக் கொள்வார். - கம்பரின் இராமகாதை’ உலகில் பயிலத் தொடங்கிய பிறகு தமிழகத்தில் வால்மீகிராமாயணப் பிரியர்கள் அதனை அதிகமாகப் பரிமளிக்கச் செய்ய முற்பட்ட பொழுது இரண்டு கூட்டத்தாரின் பிரசாரத்தில் ஒன்று வான்மீகி ராமாயணம் என்றும், ம ற் .ெ ற ர ன் று கம்பராமாயணம் என்றும் வழங்க வேண்டிய தேவை ஏற் பட்டிருக்கின்றது என்றும், இது மக்களின் வாய்வழக்கில் மட்டுமின்றி நூலுக்குப் பெயராகவும் ஏற்பட்டு விட்டது என்றும் கூறி ' கம்பராமாயணம் என்று பெயர் ஏற்பட்டதற்கு அமைதி காட்டுவர். இங்ங்ணம் ஏற்பட்ட பிரசாரத்தில் பல படியாகப் புதுக்கவிகளும் செருகப் பெற்று அவை வளர்ந்தேறி அசலைப்போல் பன்மடங்கு 'செருகு கவிகள் கலந்த பிறகு இராமகாதை’ என்ற உரிமைப் பெயரை வைத்து வழங்க மனம் ஒவ்வாமல் " கம்பராமாயணம்' என்றே இதுவும் வழங்கப்படட்டும் என்று விட்டிருக்கலாம் என்று கம்பராமாயணம்’ என்று வழக்கில் வந்தமைக்குக் காரணமும் காட்டுவர்.