பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 - நினைவுக் குமிழிகள்-இ. இங்ங்னம் காட்டும் சொ. முரு. வின் வாதம் நம்மை அவர் கருத்தை ஒப்புக் கொள்ள வைத்து விடுகின்றது. காண்டங்கள்: நூலில் காண்டங்கள் வகுக்கப்பெற்றிருப் பதைப்பற்றியும் இவர் கருத்து தெரிவிக்கின்றார். பொது வாகக் காண்டங்களின் பெயர்கள் கதை நிகழும் இடத்தை யொட்டியே கொடுக்கப்பெற்றுள்ளன. சிலப்பதிகாரத் திலும் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று கதை நிகழும் இடங்களைக் கொண்டே வகுக்கப்பெற்றிருப்பது ஈண்டு நினைக்கத் தக்கது. அயோத்தி, ஆரணியம், கிட் கிந்தை ஆகிய மூன்று காண்டங் களும் இடங்களைக் குறிக்கின்றன. பாலகாண்டம் அயோத்தியிலும் மிதிலையிலும், செல்லும் தடங்களிலும் நிகழ்வதால் அதற்கு இராமனின் பருவம், குறித்துப் பெயர் ஏற்பட்டிருப்பது பொருத்தமாக அமைந்துவிடு கின்றது. இங்ஙனமே கடற்கரையிலும், இலங்கையிலும் செல்லும் வழிகளிலும் நிகழ்வதால் ஒர் இடப் பெயரைக் கொடாமல் சுந்தர காண்டம்’ என்று பெயரிடப் பெற் றுள்ளது போலும் என்று ஒன்றும் கூறாமல் விட்டுவிடு கின்றார். இதற்குப் பலர் பல காரணங்களைக் கூறினும், (1) இராமன் பிராட்டி ஆகிய இருவருடைய அழகு இனிது கூறப்பெற்றிருப்பதாலும், (2) பிரிவுத் துயரால் வருந்திய சீதா ராமர் இருவரும் ஒருவருக்கொருவர் நலனை எண்ணி மகிழ்வதாலும் (3) ஏனைப்பகுதி சரிதைகளின் புனர்ப்பு களில் இப்புணர்ப்பு மகிழ்ச்சியைத் தருவதாலும், (4) அதுமனின் மனத்தில் சுந்தர மூர்த்திகளாகிய இருவரும் உறைவதாலும் சுந்தர காண்டம்’ எனப் பெயர் வந்தது என்று கருதலாம். யுத்த காண்டத்தின் முக்கியப்பகுதி முழுவதும் இலங்கையிலேயே நடைபெற்றிருப்பதால் இதற்கு இலங்கைக்காண்டம்’ என்ற பெயர் பொருத்த மாக இருக்கும் என்பது சொ. முரு.வின் கருத்து. படலங்கள்: படலங்களின் பெயர்களில் ஏராளமான, பாட பேதங்கள் உள்ளன. இன்றுள்ள அச்சுப்படிகளிலும்