பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொ. முரு: இராமகாதை 岱莎 ஏட்டுப்படி பலவற்றுள்ளும் காணப்படும் படலங்களின் பெயர்கள் 260 எனக் கணக்கிட்டுள்ளார் முருகப்பனார். ஆனால், இவற்றுள் 113 பெயர்களைத்தான் இதுவரை அச்சிட்டவர்கள் எல்லோரும் கைக் கொண்டுள்ளார்கள். இராமன் பக்கமுள்ளோர் அறவழிச் செல்வோர்; இராவண னுடைய பக்கமுள்ளவர் மறவழிச்செல்வோர். இராவணன் பக்கமுள்ளோர் இறப்பு வதை என்று கூறப்படுகின்றது. இந்த முறைப்படி தாடகை, கரன், கும்பகருணன், இந்திர சித்து, இராவணன் முதலியோருடைய இறப்புப் படலங் கள் வதைப் படலம்' என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. இருபக்கங்களிலும் இல்லாமல் நடுவே இறந்தவர் இருவர். ஒருவர் சடாயு; மற்றொருவர் வாலி. சடாயு வதைப்படலம் என்று இல்லை. இராவணன் சங்கரன் தந்த வாளால் சடாயுவை வெட்டிக் கொன்றாலும் சடாயு உயிர் நீத்த படலம்’ என்றே படலப் பெயர் தரப்பெற்றுள்ளது. வாலி இராவணனைச் சேர்ந்தவன் அல்லன். எனினும் அவன் இறந்த படலத்திற்கு வாலிவதைப் படலம்’ என்ற பெயர் தரப்பெற்றுள்ளது. முருகப்பனார் இப்பெயர் பொருத்த மன்று என்கின்றார். இராமனது அம்பினால் பட்டவர்கள் யாவரும் வதைப்பட்டவர் என்ற பிறழ்ந்த எண்ணத்தால் ஏற்பட்ட தவறு என்பதாகக் கொள்வர். இராவணனது கூட்டத்தினர் பலரையும் இராமனின் சரங்கள் தாம் கொன்றன. இராமனை நேரே அவர்கள் கண்டனர். அவனைப் பார்த்து மிகவும் பாராட்டி வியந்தவர்களும் பலர். ஆனால் அவர்களில் எவரும் மேலுலகம் சென்ற தாகச் சொல்லப் பெறவில்லை. வாலியை இராமனது அம்பு கொன்றது என்றாலும், வானுக்கு அப்புறத்து - உலகன் ஆனான். - என்று கூறப் பெற்றுள்ளது. எனவே வாலியின் மரணம் வதையன்று, அதனால் வாலிவதைப் படலம்’ என்று 2. வாலி வீடு-15.2 தி-5