பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நினைவுக் குமிழிகள்-3 வழங்காமல் வாலி வீடுற்ற படலம்’ என்று பெயரிடுவதே பொருத்தம் என்பது முருகப்பனாரின் கருத்து. பாடல்கள் : இராமகாதையில் கம்பர் பாடிய பாடல் களின் தொகை என்ன என்பது தெரியவில்லை; தெரிந்து கொள்வதற்கு வழியும் இல்லை. வான்மீகி முனிவர் 24,000 சுலோகங்களில் தம் காவியத்தை அமைத்தார் என்றும் அதைக் கம்பர் 12,000 செய்யுட்களில் பாடினார் என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியானால் உத்தர காண்டமும் கம்பர் பாடினார் என்று கொள்ள வேண்டி வரும், கரைசெறி காண்டம் ஏழு; கதைகள்ஆ யிரத்தெண் ணுாறு: பரவுறு சமரம் பத்து: - புடலம் நூற்று இருபத்து எட்டே உரைசெயும் விருத்தம் பன்னீர் - ஆயிரத்து ஒருபத்து ஆறு: வரம்மிகு கம்பன் சொன்ன . வண்ணமும் தொண்ணுாற்று ஆறே. -காப்பு (வை. மு. கோ. தள்ளுபடி செய்தது.) என்ற பாடல்தான் இவ்வாறு கொள்வதற்கு ஆதாரம். உத்தரகாண்டம் ஒட்டக்கூத்தர் பாடியதாக உறுதியாய் விட்டது. ஆகவே கம்பர் பாடியது யுத்தகாண்டம் வரை தான். கம்பராமாயணத்தின் ஏட்டின் இறுதியில் இப் பாடலைக்கோத்து வைத்திருந்ததால் வந்த வினையாகும் இது. எல்லாம் சேர்ந்து அச்சுக்கு வந்த பாடல்கள் :