பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நினைவுக் குமிழிகள்-3 கவிதையைப் பாடிப்பாடி அதன் ஒலி நயத்தில் (Rhythm) தன்னை மறந்திருக்கும் ஒரு பண்பட்ட உள்ளம் ஒரு தவறான பாடத்தை எப்படிச் சகிக்க முடியும்? நல்ல கவிதையையே அநுபவித்து வந்த டி. கே. சி. , எந்த இடத்தில் ஒலி நயம் குலைகின்றது, எங்கே கவிதையின் உருவமே (Form) சிதைகின்றது என்பதை மிகவும் எளிதாக அறியக் கூடிய ஆறாவது புலனை உடையவர். அப்படிப் பட்ட கவிதைகள் அவர் காதில் ஒலிக்கின்றபோது அவர் முகம் சுழிக்கின்றார். உள்ளத்தில் வேதனை உறுகின்றார்; நல்ல பாடத்தைத் தேடி அலைகின்றார்; துருவித் துருவி நோக்குகின்றார். இப்படிச் செய்தும் அவர் மனம் நிறைவு பெறாவிட்டால் அதில் கை வைக்கின்றார். பாடல் வியக்கத்தக்க உருவம் அடைந்து விடுகின்றது. நாம் அவரது மந்திரக் கையின் ஆற்றலைக் கண்டு இறும்பூது அடை. கின்றோம். தமது உள்ளத்தில் புத்துணர்ச்சிகள் எழுகின்றன. நாமும் அவருடன் சேர்ந்து அநுபவிக் கின்றோம். சில திருத்தங்களைக் கண்டால் டி. கே. சி செய்தது. சரி என்பதை நாமும் ஒப்புக்கொள்வோம் (1) பால காண்டம் குலமுறை கிளத்துப் படலத்தில், கோதமன்றன் பன்னிக்கு முன்னையுருக் கொடுத்ததிவன் போதுநின்ற தெனப்பொலிந்த - பொலன் கழற்கால் பொடிகண்டாய் காதலென்றன் உயிர்மேலும் இக்கரியோன் பால் உண்டால் ஈதிவன்றன் வரலாறும் புயவலியும் எனஉரைத்தான்' என்பது அச்சு வடிவம் பெற்ற கவிதை. இதன் இடம் நாம் அறிவோம். விசுவாமித்திரன் இராமனையும் இலக்குவனை 1. குலமுறை-29 (கடைசிப் பாட்டு)