பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. கே.சி. பாடபேதங்கள் 73 என்று திருத்தி அமைக்கின்றார். இப்பொழுது பெரிய அபவாதம் எளிதாக நீங்கி விடுகின்றது. 3. மற்றுமோர் எடுத்துக்காட்டு. இராமனைக் கானாளக் கட்டளை இடுகின்றாள் கைகேயி, இஃது அவரது ஆணை’ என்று சொல்வி பயமுறுத்துகின்றாள். 'தனக்குப் பட்டம்’ என்று தழைக்கும் உள்ளத்துடன் வரும் இராமன் இக்கட்டளையை எப்படி ஏற்றுக் கொள்ளுகின்றான்? அவன் முகமாகிய தாமரை கட்டளையைப் பெறுவதற்கு முன்னர் எப்படி இருந்தது? கட்டளையைப் பெற்றபின் எப்படி இருந்தது? இதைத் தெரிவிக்க விரும்பும் கவிஞர் பெருமான், இப்பொழு தெம்ம னோரால் இயம்புதற் கெளிதேயாரும் செப்பருங் குணத்தி ராமன் திருமுகச் செவ்வி நோக்கில் ஒப்பதே முன்பு பின்பு அவ் வாசகம் உணரக் கேட்ட அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா! என்று பாடுகின்றார். இது வை. மு.கோ. பதிப்பில் காணப்பெறும் பாடல். டி.கே.சி, சிறிய திருத்தங்கள் செய்த பிறகு பாடல் புதுக்கோலம் கொள்ளுகின்றது. இப்பொ(து) எம்ம னோரால் இயம்புதற்(கு) எளிதோ யார்க்கும் செப்பருங் குணத்தி ராமன் திருமுகச் செவ்வி நோக்கி 2. கைகேயி சூழ்வினை-108 (இறுதிப் பாடல்)