பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. கே. சி: பாடபேதங்கள் 75。 கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்(து) இருக்குமோ? மருப்பொசித்த மாதவன்தன் வாயமுதும் வாசமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண்சங்கே! என்பது திருத்திய பாசுரத்தின் வடிவம். 2. வட்டத் தொட்டி அன்பர்களில் ஒருவரான திரு. ஆண்டியப்பபிள்ளை கொண்டு வந்த பாடல் இது: எய்யவந்த காமா நீ இங்குவர வேண்டாம்காண் உய்யவந்தானோடு உறவானேன்-பையவே தேரைவிடு பூவைமுடி - தின்றுவிடு வெண்கரும்பை மீனையொரு காசாக வில் . இஃது ஒரு பழம் பாடல்; பாடினவர் பெயர் தெரியாது இப்பாடலுக்குக் கூட மருத்துவம் செய்கின்றார் டி.கே.சி அவர்கள். அங்கும் இங்குமாகச் சுளுக்கெடுத்தபின்னர், எய்யவந்த காமா! இனியுனக்கு வேலையிங்கென் உய்யவந்தான் தன்னோடு உறவானேன்-பையவே தேரைவிட்டு மென்கரும்பைத் தின்றுவிட்டுச் செய்யவந்த போரைவிட்டுப் பூமுடித்துப் போ -