பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 1X வந்ததைப் போல் பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் தமிழ் வளர்ச்சியையே தம் வாழ்க்கைப் பணியாக (Life mission) மேற்கொண்டு திருப்பதி மண்ணில் கால் வைததார். மனத்துாய்மையால், அன்பு வார்த்தைகளால், மாணவர்கள் உள்ளங்களைக் கவர்ந்தார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் போக்கு இவரிடம் இல்லாததால் மாணவர்க்கு இவரிடம் அளவற்ற நம்பிக்கை உண்டானது. அந்நம்பிக்கை, பின்னால் துறை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இந்நூலின் பிற்பகுதியில் அவர் சித்திரிக்கும் பல நிகழ்ச்சிகள் நான் நேரில் கண்டவை; முற்பகுதியில் குறிப்பிட்டுள்ள செய்திகள் நான் சித்துரரில் இருந்த நாட்களில் என்னாசிரியப் பெருமக்களால் சொல்லக் கேட்டவை; இவ்வாறு நான் கண்டதும் கேட்டதுமே இந்நூலில் எழுதப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாகத் தேதி, மாதம், ஆண்டோடு பேராசிரியர் அவர்கள் இந்நூலில் குறிப்பிட் டுள்ளார். என் சொந்த வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளை (பக் 594,595) இந்நூலில் நான் படிக்கும் போது, பேராசிரியர் இவைகளையெல்லாம் ஏதாவது கோப்புகளைப் பார்த்து எழுதினாரோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது . ஆய்வு மாணவனாக நான் ஆற்றிய பணிகள், நான் பெற்ற பல்கலைக்கழக மானியப் படிப்புத் தொகை ரூ. 750 = மூன்றாண்டுகள் இங்ங்னம் கிடைத்தது. ஒரு மூன்று மாத காலமாக நான் வகுப்பில் செய்தபணி, அதற்குப் பல்கலைக்கழகம் ஊதியம் கொடுக்க மறுத்த நிகழ்ச்சி, பின்னர், பேராசிரியர் முயற்சியால் அப்பணிக்குரிய ரூ. 1200/- காசோலையைப் பெற்றது. இவைகளெல்லாம் நானே மறந்துபோன நிகழ்ச்சிகள். இவற்றையெல்லாம் நேற்று நடந்ததுபோல் குறிப்பிடும் பேராசிரியரின் நினைவாற்றல் வியத்தற் குரியது. இந்நூலில் சித்திரிக்கப்பெறும் ஒவ்வொரு திகழ்ச்சியும் வேதனை மிகுந்த பேராசிரியர் உள்ளத்தில்